காஸா: நேற்று நள்ளிரலிவிருந்து காஸா மீது பலத்த ஆர்டிலரி ரொக்கட்டுக்களை இஸ்ரேல் ஏவிவருகின்றது. எப்போதுமில்லாதவாறு இந்நிமிடம் வரைக்கும் இடைவிடாது இஸ்ரேலின் எரிகணைகள் காஸாவுக்குள் வீழ்ந்து வெடித்தவண்ணமிருக்கின்றன.
நேற்று நள்ளிரவிலிருந்து இந்நிமிடம் வரைக்கும் 100 பொதுமக்கள் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர்.
பல கட்டடங்கள் எரிகணைகளால் சிதருண்டு கிடப்பதாகவும், இன்னும் பல சடலங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருப்பதாகவும் களத்தலிருக்கும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காஸாவில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கின்றது. குழந்தைகளும் பெண்களும் இருள் சூழ்நத இடங்களில் தஞ்சமடைந்திருந்தாலும், உணவுப் பொருட்களின்றி, ஆடைகளின்றி பெரிதும் அவதிப்படுவதாகவும் அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பலத்த சிரமத்துக்கு மத்தியிலும் ஹமாஸ் தனது பதிலடியை உடனுக்குடன் இஸ்ரேலுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment