டமஸ்கஸ்: இஸிஸ் போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம் ஒன்று அவர்களது ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இஸிஸ் அமைப்பின் திட்டமாகும்.
எதிர்காலத்தில் ஈராக்கின் அண்டை நாடுகளான லெபனான், பலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி (ISIL) ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது இந்த இயக்கத்தில் 11 ஆயிரம் பேர் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் ஈராக்கிலும், 5 ஆயிரம் பேர் சிரியாவின் உள்நாட்டுப் போரிலும் ஈடுபட்டு உள்ளனர். இஸிஸ் படையில் அமைப்பில் தற்போது 15 ஆயிரம் பேர் வரை தயாராக உள்ளதாகவும், தங்களது படையினரின் எண்ணிக்கையை 60 ஆயிரமாக உயர்த்த இஸிஸ் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸிஸ் இயக்கத்தில் உள்ள திருமணமாகாத ‘ஜிஹாத்’ போராளிகளுக்கு பெண் தேடும் அலுவலகத்தை அந்த இயக்கம் இன்று திறந்துள்ளது.
வடக்கு சிரியாவில் உள்ள அல் பாப் என்ற பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் இஸிஸ் போராளிகளை திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் இளம் பெண்கள் மற்றும் விதவைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள பெண்களின் வீட்டுக்கே சென்று, முறைப்படி பெண் கேட்டு, இஸ்லாமிய முறைப்படி போராளிகள் மனைவியாக்கிக் கொள்வார்கள் என இஸிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Published by


Leave a comment