அமெரிக்க ஜெட் தாக்குதலில் 15 இஸிஸ் போராளிகள் கொல்லப்பட்டனர்!

Mosul_Dam_hydro_power_plant[1]– MJ

மொசூல்: ஈராக்கின் இஸ்லாமிய கலீபஃத் மாநிலத்தின் பிரதான நகராக இருக்கும் மொசூல் நகரின், அணைக்கட்டிற்கு அருகாமையில் நிலைகொண்டிருந்த இஸிஸ் போராளிகளை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஜெட் தாக்குதலில் குறைந்தது 15 இஸிஸ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக்கிலிருந்து இஸிஸ் அமைப்பால் வெளியேற்றப்பட்ட குர்திஸ் இனத்தவர்களுக்கு உதவும் முகமாக அமெரிக்கா ஈராக்கில் மீண்டும் சில நகர்வுகளை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த ஜெட்தாக்குதலை அமெரிக்கா இன்று மேற்கொண்டிருந்தது.

ஈராக்கின் மிகப்பெரிய அணைக்கட்டான மொசூல் அணைக்கட்டை இஸிஸ் அமைப்பினர் சில மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mosul_Dam_hydro_power_plant[1]
ஈராக்கின் மிகப்பெரிய மொசூல் அணைக்கட்டு

Published by

Leave a comment