கொழும்பு: தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் திவிநெகும வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமூட்டுவதன் ஊடாக மகிந்த ராஐபக்ஸ அவர்களின் கரத்தினை மேலும் பலப்படுத்த முடியும். இவ்வாறு அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான திரு ஐ டி ஜகத் குமார தெரிவித்தார்.
தமிழ் பேசும் வடக்கு கிழக்கு திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு மேற்படி திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் பத்தரமுல்ல காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாடு தற்போது அபிவிருத்தி கண்டு வருகின்றது. திவிநெகும திட்டத்தின் ஊடாக வறிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கின்றது. பல்வேறு வேலைத்திட்டங்களை திவினெகும ஊடாக மேற்கொள்வதற்கு இந்த அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் 06 வலயங்களாக திவிநெகும வலயம் பிரிக்கப்பட்டு பிரதேச ரீதியாக வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன அந்த வகையில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை இந்த அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது 1995ம் ஆண்டு 1995.00 சம்பளம் பெற்ற நாம் தற்போது கணிசமான சம்பளத்தினை பெற்று தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் பெறுவதற்கு ஆயத்தமாகவுள்ளோம் வரலாறு காணாத அதிகார சபையை திணைக்களமாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் பாரிய முயற்சியினை மேற்கொண்டது என்பதை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த மோட்டார் சைக்கிள் அனைத்து சமுர்த்தி (திவிநெகும) உத்தியோகத்தர்களுக்கும் கிடைக்கும் இதற்கு உத்தம ஐனாதிபதி அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட முன்மொழிவாகும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் திவினெகும வேலைத்திட்டம் சிறப்பாக இயங்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் பொது மக்களுக்கும் உத்தியோகத்தர்களாகிய நீங்கள் எடுத்துக்கூற வேண்டும். அப்போதுதான் எதிர்வரும் தேர்தலில் ஐனாதிபதி அவர்களுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்ககொள்ளமுடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.
இந்த திவிநெகும உத்தியோகத்தர்களின் பதவியுயர்வு மற்றும் எதிர்கால நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மற்றும் பாடுபடுவோம் அதற்கு உங்களின் பூரணஒத்துழைப்பு அவசியமாகும் என்பதோடு திவினெகும வேலைத் திட்டத்தினை மக்களுக்கு சரியாக கொண்டு செல்லவேண்டும் எனவும் கூறிக்கொள்கின்றேன் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்விற்கு வடக்கு கிழக்கில் இருந்து சங்கத்தின் தமிழ் பேசும் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment