மொசூல்: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணைக்கட்டான மொசூல் அணைக்கட்டை, இஸிஸ் அமைப்பினர் கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நிலையில், தற்பொழுது அமெரிக்காவின் பின்னணியில் ஈராக் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்க ஜெட் விமானம் மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து, இஸிஸ் போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அணைக்கட்டு பிரதேசத்தைவிட்டு, பின்வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இப்பிரதேசம் தற்பொழுது ஈராக் அரசாங்கப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
அணைக்கட்டை இஸிஸ் அமைப்பிடமிருந்து மீட்க, ஈராக்கின் குர்திஸ் படையினர் தரைவழியாக தாக்குதல் நடாத்தி முன்னேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by
![Mosul_Dam_hydro_power_plant[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/08/mosul_dam_hydro_power_plant1.jpg?w=150&h=108)
Leave a comment