காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 06-10-2014 இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் கடற்கரைத் திடலில் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகை திடலில்தான் தொழவேண்டும் என்ற நபிவழிக்கேற்ப காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வழமையாக ஏற்பாடு செய்துவரும் இந்தத் திடல் தொழுகையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் எம்.ஏ.ஹாலிதீன் பலாஹி நிகழ்த்தினார்.
இத்திடல் தொழுகையில் உலமாக்கள்,அரசியல்வாதிகள்,ஊர்பிரமுகர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான ஆன்கள் பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் இத்திடல் தொழுகையில் ஆண் பெண் கலப்பில்லாதவாறு ஒழுங்குகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment