காத்தான்குடிக்கு ஏன் இதுவரைக்கும் ஓர் தீயணைப்பு வாகனம் கிடைக்கப்பெறவில்லை? தவிசாளர் அஸ்பரிடம் கேள்வி
– எம்.எச்.எம். அன்வர்
காத்தான்குடி: சுமார் 15 ஆயிரம் குடும்பம் மற்றும் 60,000 சனத்தொகையினைத் தொடும் காத்தான்குடி பிரதேசத்திற்கு எப்போது தீயணைப்பு வாகனம் கிடைக்கப்போகிறது என இப்பகுதியில் வாழும் பலர் அங்கலாய்க்கின்றனர். அண்மையில் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட இத்தீயணைப்பு வாகனம் ஏன் காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்படவில்லை?
என்பதுடன் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ ஏ. எல். எம். அதாவுல்லா அவர்களின் சிபாரிசின்பேரிலேயே இவ்வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்விடயத்தில் ‘காத்தான்குடிக்கு ஏன் இதுவரையிலும் இவ்வாகனம் எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை”? என நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர் இடம் கேட்கப்பட்டபோது,
எஸ். எச். எம். அஸ்பர் (தவிசாளர்)
“இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் கௌரவ அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லாவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான எந்தவித பதில்களும் இதுவரையிலும் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே நாங்கள் பெற்றுக்கொண்ட குப்பை எடுக்கும் இயந்திரம், மலக்கழிவகற்றல் இயந்திரம் கொள்வனவு செய்ததுபோல் இதையும் கொள்வனவு செய்வது என தீர்மானித்துள்ளோம்”. எனத்தெரிவித்தார்.
காத்தான்குடி நகரமான எமது பகுதியில் தீ அனர்த்தம் ஏற்படும்போது அவ்வாகனத்திற்கு உடனே அழைத்தால் இவ்வாகனம் உடனே அவ்விடத்திற்கு வந்து தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியாக இருக்கும் என்பது நாம் அறிந்த விடயமாகும்.
மட்டு நகருக்கு வழங்கப்பட்டுள்ள தீயணைப்பு வாகனம்
மட்டக்களப்பு மாநகர சபைக்கு அண்மையில் தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டதுடன் தீயணைப்பு பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லும் நடப்பட்டது. எமது பகுதிக்கு இவ்வாகனத்தை அழைத்தால் மட்டக்களப்பு மாநகர சபையினால் அனுப்பி வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்ற அதேவேளை, அவ்வாறு வருவதாயினும் சுமார் 15 நிமிடங்களாயினும் செல்லும் அதற்கிடையில் சேதங்கள் கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது என்பதும் பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் சன நெரிசலுடன் கூடிய காத்தான்குடி பிரதேசத்திற்கென்று ஒரு தீயணைப்பு வாகனம் மிக அவசிய தேவையாகவுள்ளது என்பதே இங்கு குறிப்பிடத்தக்க விடமாகும்.
One response to “காத்தான்குடிக்கு ஏன் இதுவரைக்கும் ஓர் தீயணைப்பு வாகனம் கிடைக்கப்பெறவில்லை? தவிசாளர் அஸ்பரிடம் கேள்வி”
mohmedrislan
முன்னால் அமைச்சர் ARM.மன்ஸுர் சிவானந்தா வித்தியாலயத்திற்கு 02 கோடி ரூபா செலவில் மாணவர் விடுதி அமைத்துக் கொடுத்தார்.
இன்னால் அமைச்சர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு 10 கோடி ரூபா பெறுமதியான தீயனைப்பு வாகணத்தை வழங்கினார்.
————–நாங்கள் உங்கள் பக்கம்தான் என்பதனை தெரியப்படுத்த………………………
Leave a comment