காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் ஏற்பாடு செய்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 06-10-2014 இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இங்கு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் அல்ஹாபிழ் மௌலவி எம்.எஸ்.அப்துல் காதர் (பலாஹி) நிகழ்த்தினார்.
இவ் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் உட்பட பெருமளவிலான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
Published by





Leave a comment