இளம் குர்திஷ் பெண் போராளியின் தற்கொலைத் தாக்குதலில் 33 இஸிஸ் படையினர் பலி!

kurdish– AF – 90

டமஸ்கஸ்: ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் பெண் போராளி ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 33 ஐ.எஸ். போராளிகள் பலியாகியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ள இஸிஸ், தனி இஸ்லாமிய தேசத்தை பிரகாடனம் செய்து தொடர்ந்து அட்டூழியங்களை நிகழ்த்தி வருகிறது.

மேற்கு சிரியாவில் வசிக்கும் குர்திஷ் இன மக்கள், ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர்களை ஒழிக்கும் நோக்கில் அங்கு உள்ள 350 கிராமங்களை குர்திஷ் படையினர் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

kurdish
தற்கொலைத் தாக்குதல் நடாத்திய குர்திஷ் பெண் போராளி அரின் மிர்கின்

இந்நிலையில், மேற்கு சிரியாவில் உள்ள கோபேன், நகரத்தில் நேற்று இஸிஸ் இற்கு எதிராக குர்திஷ் படையினர் தாக்குதலை நடத்தியபோது, அரின் மிர்கின் என்ற பெண் போராளியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுற்றிவளைக்க முயன்றுள்ளனர்.

அப்போது திடீரென அந்த பெண் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்.இதில் 33 ஐ.எஸ். இயக்கத்தினர் பலியாகியுள்ளனர். இந்தத் தற்கொலைத் தாக்குதலை சற்றும் எதிர்பார்த்திராத இஸிஸ் இயக்கத்திக்கு தற்பொழுது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதது.

kurdish (2)
தற்கொலைத் தாக்குதல் நடாத்திய குர்திஷ் பெண் போராளி அரின் மிர்கின்

தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர் 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் போராளி எனவும், அவருக்கு இரு பெயர்கள் இருப்பதாகவும், துணைப் போராளி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அத்துமீறும் செயற்பாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கையில், அவர்களின் சுற்றிவளைப்பில் சிக்கிக்கொண்டார். எனினும் தன்னிடமிருந்த கைக்குண்டுகளை இஸிஸ் தீவிரவாதிகள் மீது வீசி, அதன் பின்னர் தனது உடலில் இருந்த சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்து பலியானார் எனவும் மற்றுமொரு குர்திஷ் போராளி குறிப்பிட்டார்.

kurdish (3)
குர்திஷ் பெண் போராளிகள்

Published by

Leave a comment