இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த உடனேயே 4 இலங்கை ஹொக்கி வீரர்கள் தலைமறைவாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தென்கொரியாவின் இன்சியானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.
இலங்கை இராணுவத்தின் ஹொக்கிப் பிரிவில் விளையாடும் மாத்தறையைச் சேர்ந்த குறித்த 4 வீரர்களே தலைமறைவாகி இருப்பதாக சிறிலங்கா ஹொக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இவர்கள் ஒருவேளை கொரியாவிலேயே தங்கி வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளால் வெளிநாடுகளில் சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுக்கும் வாய்ப்புக்கள் இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் என்பது கவலையான விடயம்.
Published by


Leave a comment