Category: Your Kattankudy
-
வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டவர் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும்
கொழும்பு: வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ள வர்கள் வடக்கிற்கு செல்லவே வேண்டுமானால் பயணத்தின் நோக்கம், செல்லுமிடங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்து முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்த பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி ஏற்கனவே அமுலிலிருந்த இந்த நடைமுறையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.
-
சர்வதேச கைகழுவும் தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: உலக சுகாதார தினம் மற்றும் சர்வதேச கை கழுவும் தினத்தையொட்டி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் ஊர்வலம் மற்றும் செயன்முறைப் பயிற்சியும் ஏறாவூரில் (15.10.2014) நடைபெற்றன.
-
தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் சுன்னத்வல் ஜமாஅத் என்போர் யார்? எனும் தலைப்பில் விஷேட தர்பியா நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் சுன்னத்வல் ஜமாஅத் என்போர் யார்? எனும் தலைப்பில் விஷேட தர்பியா நிகழ்வு எதிர்வரும் 17-10-2014 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.
-
வேகமாகப் பரவும் எபோலா! மரணித்தவர்களின் எண்ணிக்கை 4447!!
– AF- 90 ஜெனிவா: எபோலா நோய்க்கு இதுவரை 4,447 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், வாரத்திற்கு பத்தாயிரம் பேர் எபோலா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் நிலவுவதாகவும் அது கவலைத் தெரிவித்துள்ளது.
-
குர்து இன பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்றது ஐ.எஸ்
– AF- 90 பாக்தாத்: குர்து இன பத்திரிகையாளர் முஹனத் அகிடியை, ஐ.எஸ் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த செயலுக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அக்டோபர் 13ம் தேதி அகிடியை ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
-
ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் மலேசியாவில் கைது!
கோலாலம்பூர்: ‘இஸ்லாமிய அரசு ‘ குழுவுடன் தொடர்புகள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். இது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் அடங்குகிறார்கள் என்று உள்ளூர் செய்தி ஒன்று கூறியது.
-
அமைச்சர் றிஷாதின் முயற்சியில் மன்னார் கச்சேரிக்கு நான்கு மாடிக் கட்டிடத் தொகுதி
– பூமுதீன் மன்னார்: அமைச்சர் றிஷாதின் அயராத முயற்சியின் மற்றுமோர் பெறுபேறாக வெற்றிடமாக இருந்த மன்னார் கச்சேரி கட்டிடத் தொகுதி 24 கோடி ரூபா செலவில் கட்டப்படுகின்றது. இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 2014.10.14 நடைபெற்றது.
-
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரில் விழிப்புணர்வு ஊர்வலம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: 15-10-2013 திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையுடன் இணைந்து மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகம் என்பன ஏற்பாடு செய்த வெள்ளைப்பிரம்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்; 15-10-2014 இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நகரில்; நடைபெற்றது.
-
பலஸ்தீனத்திற்கு பிரித்தானிய எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு
லண்டன்: பலஸ்தீன தேசத்தை அங்கீகரித்து பிரிட்டன் பாராளுமன்ற உறுப் பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரிட்டன் பாராளுமன்ற கீழவையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற இந்த வாக்கெடுப்பில் அரைவாசிக்கும் குறைவான உறுப் பினர்களே பங்கேற்றிருந்தனர். இதில் 274-2 என்ற அடிப்படையில் இஸ்ரேலையொட்டி பலஸ்தீன தேசத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
-
தேசிய வாசிப்பு மாதம் – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: நவீன ஊடகங்களின் வருகையின் பின் அருகிவருகின்ற வாசிப்புதிறனை கட்டி எழுப்பும் முகமாக நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் மாதம் ‘வாசிப்பு மாதமாக’ அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
-
றியாத்தில் இரு அமெரிக்க உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!
– MJ றியாத்: றியாத் நகரின் மன்னர் ஃபஹத் விளையாட்டரங்கிற்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, இரு அமெரிக்க பிரஜைகள் இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகியுள்ளனர். இவர்களுள் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயங்களுடன் ரியாத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரியாத் பொலிஸார் தெரிவித்தனர்.
-
மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கும், கழிவறைத் தொகுதிக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் மருதமுனை: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 52 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கும், கழிவறைத் தொகுதிக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்றது.