சர்வதேச கைகழுவும் தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு

unnamed1ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: உலக சுகாதார தினம் மற்றும் சர்வதேச கை கழுவும் தினத்தையொட்டி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் ஊர்வலம் மற்றும் செயன்முறைப் பயிற்சியும் ஏறாவூரில் (15.10.2014) நடைபெற்றன.

பாட இணைப்பாளர் எச். எம். ஏ. மாஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. எம்.  அஹமட் லெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஏறாவூர்- அல் -அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான மாணவர் பேரணி மக்காமடி வீதியூடாக  புன்னக்குடாவீதியை அடைந்து அங்கிருந்து  ஏகேஎம் வீதியூடாக  காட்டுப்பள்ளி வீதிக்கு வந்து  மீண்டும் அஸ்ஹர் பாடசாலை முன்றலை சென்றடைந்தது.

மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம், மிச்நகர் அ.மு.க பாடசாலை, அல்- ஜுப்ரிய்யா வித்தியாலயம்,  அல்- முனீறா பாலிகா வித்தியாலயம் மற்றும் அல் அஸ்ஹர் வித்தியாலயம் ஆகிய ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் நூற்றைம்பது மாணவர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.

unnamed

சுத்தம் மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். ஏறாவூர் கோட்டக்கல்வியதிகாரி ஐ.எல்.எம். மஹ்ரூப் உதவிக் கல்விப்பணிப்பாளர் எம். எச். எம். நஸீர் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ஏ.எம். றபீக் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.

ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம். எச். எம். தாரிக் மற்றும் பொதுச் சகாதார பரிசோதகர் ஆர். இன்பராஜா ஆகியோர் அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்களைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு செய்முறைப்பயிற்சியுடனான அறிவுரைகளை வழங்கினர்.

unnamed1

Published by

Leave a comment