Category: Your Kattankudy
-
பக்தாத்: பள்ளிவாயலுக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி!
– MJ பக்தாத்: ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 19 பேர் ஸ்தலத்தில் பலியாகினர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர். பக்தாத் ஷியா பள்ளிவாயலுக்குள் ஜனாஸாத் தொழுகைக்காக கலந்துகொள்ள வருகை தந்தவர்களை இலக்குவைத்து இத்தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடல்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினருக்கும் கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்குமிடையில் வைத்தியசாலை அபிவிருத்திச் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று (19-10-2014) இரவு 8.30 மணியளவில் அமைச்சரின் சம்மாந்துறை வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
-
3000 யுவதிகளுக்கு தையல் பயிற்சியுடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: வடக்கிலும், அதற்கு வெளியிலும் வாழும் தொழிலற்ற யுவதிகள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுததுச் செல்லும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்துவரும் மக்கள் நலன் திட்டத்தின் அடுத்த கட்டமாக 3000 யுவதிகளுக்கு தையல் பயிற்சியுடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
’10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஹஜ்ஜிற்கு அழைத்து வருவதில் தடை விதிக்கப்படலாம்’!
– MJ றியாத்: “அடுத்த வருட ஹஜ் வீசா நடை முறையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் ஹஜ்ஜிற்காக அழைத்துவருவதற்கு தடை விதிக்கப்படலாம்” என சவுதி அரேபிய ஹஜ் அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக உளநல தினம்
– நமது நிருபர் காத்தான்குடி: உலக உளநல தினத்தை முன்னிட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உள நலப் பிரிவான உறவின் உதயம் பகுதியின் ஏற்பாட்டில் உலக உளநல தின நிகழ்வுகள் கடந்த 2014.10.11 ம் திகதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
-
சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருதைப் பெற்றார் எம்.எம். பாஹிர்
– சகாப் ஸஜாத் கொழும்பு: 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருதை சூழலியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான எம்.எம். பாஹிர் பெற்றுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி பத்தரமுல்லை, கிரேண்ட்போல் றூம் ஹோட்டலில் நடைபெற விருக்கும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விருது பெறவுள்ள இவர், ப்ரபோதய சஞ்சிகை, திவயின பத்திரிகை ஆகியவற்றில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார்.
-
‘இந்த நாட்டிலிருந்து வஹ்ஹாபிஷத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தினரையும் விரட்டியடிக்க அனைத்து ஸூன்னத் வல் ஜமாஅத்தினராகிய நாம் ஒன்றுபடுவோம்’
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி:இந்த நாட்டிலிருந்து வஹ்ஹாபிஷத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தினரையும் விரட்டியடிக்க அனைத்து ஸூன்னத் வல் ஜமாஅத்தினராகிய நாம் ஒன்றுபடுவோம் இவ்வாறு காத்தான்குடி -5 பத்திரியாஹ் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற ஸூன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் போது மாநாட்டின் செயலாளர் மௌலவி எம்.எல் ஏ எம் காஸிம் (பலாஹி) JP மாநாட்டின் நோக்கம் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
-
“அத்வைதிகளின் “சுன்னத் வல் ஜமாஅத்” மாநாடும் அம்பலத்திற்கு வரும் உண்மைகளும்”
காத்தான்குடி:வல்ல இறைவனின் பேருதவியால் 17.10.2014 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் “அத்வைதிகளின் “சுன்னத் வல் ஜமாஅத்” மாநாடும் அம்பலத்திற்கு வரும் உண்மைகளும்” என்ற கருப்பொருளில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்திய மாநாடு நடை பெற்றது.
-
அல்கைதாவுடன் தொடர்புடைய முன்னால் இலங்கை அரசியல்வாதி
கொழும்பு: மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர், 2002 இல் செய்யப்பட்ட கொலைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
-
பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை – புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையானது அரசாங்க பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை மையப்படுத்தி பாடசாலைப் பாடங்கள் மற்றும் ஷரீஆத் துறைப் பாடங்களை உள்ளடக்கிய பகுதி நேரக் கற்கை நெறியொன்றினை கடந்த வருடம் முதல் ஆரம்பித்து சுமார் 50 மாணவ மாணவிகளுடன் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
-
காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் ஆசிரிய தின நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் 2013ம் ஆண்டு புலமைப்பரிசில் எழுதி இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது ஒரு பின்தங்கிய பாடசாலையாகும். அவ்வாறு சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களினால் கற்பித்த ஆசிரியைகளையும், ஏனைய ஆசிரியர்களையும் கௌரவித்தமையோடு ஆசிரிய தின நிகழ்வுகளும் கொண்டாடப்பட்டது.