பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை – புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை

bismi madrasa– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையானது அரசாங்க பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை மையப்படுத்தி பாடசாலைப் பாடங்கள் மற்றும் ஷரீஆத் துறைப் பாடங்களை உள்ளடக்கிய பகுதி நேரக் கற்கை நெறியொன்றினை கடந்த வருடம் முதல் ஆரம்பித்து சுமார் 50 மாணவ மாணவிகளுடன் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இக்கற்கை நெறியானது தரம் 06 முதல் தரம் 11 வரையான காலப்பிரிவுகளை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. வார மற்றும் வார இறுதி நாட்களில் பி.ப. 3.30 – பி.ப. 9.00 மணி வரையும் வார இறுதி நாட்களில் மேலதிகமாக மு.ப. 5.30 – மு.ப. 9.30 மணி வரையும் எமது பாடசாலை நடைபெற்று வருகின்றது. கணிதம், தமிழ், ஆங்கிலம், தகவல் தொழிநுட்பம் (IT), சிங்களம் போன்ற பாடசாலைப் பாடங்களும், அல்குர்ஆன், தப்ஸீர், பிக்ஹ், ஹதீஸ், ஸீரா போன்ற ஷரீஆத் துறைப் பாடங்களும் நடைபெறுவதுடன் பாடசாலைப் பாடங்கள் அனைத்தையும் சுயமாக கற்பதற்கான விசேட வழிகாட்டல்களும் மாணவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் வளர்க்கும் வகையிலான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

bismi madrasa
பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை

2015 ஆம் ஆண்டில் தரம் 06 இல் பாடசாலைக் கல்வியைத் தொடர இருக்கும் மாணவ மாணவிகள் இக்கற்கை நெறிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ஆகவே உங்கள் பிள்ளையையும் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையில் இணைக்க விரும்பினால் எதிர்வரும் 22 ம் திகதி காலை 8.00 மணிக்கு இல. 171/4, அலியார் ஹாஜியார் ஒழுங்கை, பிரதான வீதி, காத்தான்குடி 6 இல் அமைந்துள்ள பிஸ்மி தலைமையகத்தில் இடம்பெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றச் செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு
MSM. நுஸ்ரி (நளீமி)
077 538 9353

Published by

Leave a comment