காத்தான்குடி: உலக உளநல தினத்தை முன்னிட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உள நலப் பிரிவான உறவின் உதயம் பகுதியின் ஏற்பாட்டில் உலக உளநல தின நிகழ்வுகள் கடந்த 2014.10.11 ம் திகதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரி.கௌரிசங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுனர் டாக்டர் ரி.கடம்பநாதன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நஸீர்தீன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல பகுதி வைத்தியர் டாக்டர் சுசிகலா பரமகுருநாதன், பொது வைத்திய நிபுனர் டாக்டர். பி.கே.சிசிர குமார வைத்தியசாலையின் வைத்திய உத்தியோகத்தர்கள் உட்பட சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதோடு ஆரையம்பதி, பாலமுனை, காங்கேயனோடை வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது உளநல நோயினை ஏற்படுத்தும் காரணிகள், நோய்க்கான அறிகுறிகள், சிகிச்சை, பராமரிப்பு தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுனர் டாக்டர் ரி.கடம்பநாதன் அவர்கள் விரிவான உரையினையும், உளநல நோயினை ஏற்படுத்தும் காரணிகளை இனம் காணல் மற்றும் உள நோயாளிகளுடன் சேர்ந்து வாழ்தல் அவர்களை சமுகத்திலிருந்து விலகி விடாமல் எவ்வாறு பாதுகாத்தல் என்பது பற்றிய விளக்கத்தினை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல பகுதி வைத்தியர் டாக்டர் சுசிகலா பரமகுருநாதன் தெரிவித்ததுடன் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உள நோயாளிகள் யார் அவர்களை மார்க்க அடிப்படையில் எவ்வாறு நோக்க வேண்டும் அவர்களுக்கு எவ்வாறான மார்க்க ரீதியிலான பயிற்சிகளை வழங்க வேண்டும் மற்றும் அண்மைக்காலங்களில் எமது காத்தான்குடி பிரதேசத்தில் உள நோயாளிகளின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பன பற்றி காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நஸீர்தீன் அவர்கள் குறிப்பிட்டார்.
இறுதியாக உள நோயாளிகளால் எவ்வாறான சவால்களையும் எதிர்கொள்ள முடியும் முன்னேறவும் என்ற தலைப்பிலான சுவாரஷ்யமான வீடியோ காட்சியினை உளநல மருத்துவ உத்தியோகத்தர் என்.நித்தியானந்தன் அவர்களால் காண்பிக்கப்பட்டது.
Published by

Leave a comment