‘இந்த நாட்டிலிருந்து வஹ்ஹாபிஷத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தினரையும் விரட்டியடிக்க அனைத்து ஸூன்னத் வல் ஜமாஅத்தினராகிய நாம் ஒன்றுபடுவோம்’
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி:இந்த நாட்டிலிருந்து வஹ்ஹாபிஷத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தினரையும் விரட்டியடிக்க அனைத்து ஸூன்னத் வல் ஜமாஅத்தினராகிய நாம் ஒன்றுபடுவோம் இவ்வாறு காத்தான்குடி -5 பத்திரியாஹ் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற ஸூன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் போது மாநாட்டின் செயலாளர் மௌலவி எம்.எல் ஏ எம் காஸிம் (பலாஹி) JP மாநாட்டின் நோக்கம் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அப்துல் ஜவாத் ஆலிம் வலியுள்ளாஹ் நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலமாஉகள் மாநாடானது 18,19 திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் 20 ம் திகதி பொதுக் கூட்டமும் இடம் பெறவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட உலமாஉகள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டின் செயலாளர் மௌலவி எம்.எல் ஏ எம் காஸிம் (பலாஹி) JP தனதுரையில்……
இன்று நாட்டில் வஹாபிஷம் பல வடிவங்களில் தலைதூக்கியுள்ளது 04 பேர் இருந்தாலும் 40 பேர் இருப்பதுபோல் அவர்கள் செயற்பட்டு இயங்குகின்றனர். ஆனால் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் ஆகிய நாம் 400 பேர் இருந்தாலும் செயற்பாடின்றி கிடக்கின்றோம். அண்மைக்காலங்களில் இந்த நாட்டில் ஏற்பட்ட பிற சமூகத்தவரோடு இருந்த நல்லுறவு பிளவுபட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த வஹ்ஹாபிஷம்தான் அவர் தெரிவித்தார்.
மேலும் சவுதி றியாழ்களுக்கும், தீனார்களுக்கும் ஏமாறுபவர்களள்ளர் நாங்கள். மாற்று மத மதகுரு ஒருவர் புனித அல்குர்ஆனை பற்றி ஆய்வு செய்ய வருமாறு அழைக்கின்றார். இது மட்டுமல்ல 40 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் காணப்பட்ட கந்தூரி, மௌலிது, கத்முல் குர்ஆன் ஓதுவது, இப்போது இல்லை அவர்கள் நிறுத்திவிட்டனர். இதை கூறுவதற்கே இந்த மாநாடு கூட்டப்பட்டது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
நாம் எமது இஸ்லாத்தையும் ஈமானையும் பாதுகாக்க ஒன்று படுவோம்.
இந்த மாநாட்டை நடாத்த ஜம்இய்யத்துல் உலமாவுடன் அனுமதிகேட்டோம் அவர்கள் 2 மாதங்களாக எந்த பதிலும் தரவில்லை இதற்கு 234 உலமாஉகள் ஒப்பமிட்டுள்ளனர் அத்துடன் நாம் அமைப்பு ரீதியாக ஒன்றுபடவேண்டும். எமக்குள்ளே ஒற்றுமையில்லை தரீக்கா ரீதியாக நாம் இன்று பிளவுபட்டுள்ளோம்.
சாதுலியா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நஜ்ஜபந்தியா தரீக்கா, ஆகிய தரீக்காக்களுள்ளே பிளவு காணப்படுகிறது. இதைப்பயன்படுத்தி வஹ்ஹாபிகள் நுழைந்துவிட்டனர். இதை சீர்செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது. என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் பிற சமூகத்தவரோடு இருந்த நட்புறவு பாதிக்கப்பட்டது இப்போது மட்டுமல்லவே. 1915 ஆம் ஆண்டு கலவரம் நடக்கும் போது இலங்கையில் வகாபிக் கொள்கையுடைய ஒருவராவது இருந்தாரா? அப்போ அந்தக் கலவரம் யாரால் நடந்தது? அப்போது சவுதியிலிருந்து ரியாழும், தினாரும்(சவுதியில் தினார் பயன்பாட்டில் இல்லை) வந்து கொண்டு இருந்ததா?
வகாபிகளால் நாட்டில் அந்நிய சமூகத்தவரோடு இருந்த உறவு பாதிக்கப்பட்டு விட்டதாம். இலங்கையில் ஆயுதம் தாங்கிய ஜிகாத் குழுக்கள் உண்டு என்றும், அவர்கள் பல இடங்களில் பயிற்சி பெறுகிறார்கள் என்றும் இன்று இவவாத தேரோக்கள் கூறுவதற்கு முதலே கொழுத்திப் போட்டவர்கள் அலவியும், சாலியும் தானே!. குடுக் காரனைப் பிடிக்க அவனது வீட்டை பொலிஸ் சுற்றி வளைத்திருக்கும் போது ஆளுனர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளே சென்று அவனைக் காப்பாற்றிய அலவிதான் முதன் முதலில் பத்திரிகைக்கு பேட்டியளித்தான். சாலிதான் லக்பிம பத்திரிகையில் காத்தான்குடியில் ஆயுதக் குழு, ஆயுதப் பயிற்சி, அரபு நாடாக்கப் பார்க்கின்றனர் என்றெல்லாம் கட்டுரை எழுதனான். இதெல்லாவற்றையுமே இன்று ஞானசாரக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.
வகாபிகள் 4 பேர் இருந்தாலும் 40 பேர் போன்று செயற்படுகின்றனராம். 400 பேர் இருந்தும் செயற்பாடின்றி இருக்கின்றனராம். தற்போது இலங்கையின் விரல் விட்டெண்ணக் கூடிய ஒரு சில ஊர்களைத் தவிர எந்த ஊரிலும் தரீக்கா பின்னால் சுற்றும் 400 பேர் இல்லையப்பா. இதனால் கத்தம், பாத்திகா என்று கறக்க முடியாமல் போய் விட்டது. புரோகிதர்களின் வருமானம் படுத்து விட்டது. அதுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் மீது பழி போடுகிறார்கள்.
சோத்துல உப்புப் போட்டு திங்கிற கூட்டமாயிருந்தால் கத்தம் பாத்திகாவை துட்டு வாங்காமல் ஓதிக் காட்டட்டும்.
நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! (ஏகஇறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்
.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்
எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள்
அநீதி இழைத்தோர் தமது இறைவனிடம் நிறுத்தப்பட்டிருக்கும் போது நீர் பார்ப்பீராயின் அவர்களில் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவார்கள். “நீங்கள் இல்லாதிருந்தால் நாங்களும் நம்பிக்கை கொண்டிருப்போம்
நேர்வழி உங்களிடம் வந்த போது நாங்கள் தான் உங்களைத் தடுத்தோமா? இல்லை. மாறாக நீங்களே குற்றவாளிகளாக இருந்தீர்கள்” என்று பெருமையடித்தோர் பலவீனர்களிடம் கூறுவார்கள்.
இரவிலும், பகலிலும் செய்த சூழ்ச்சி தான் (எங்களை வழிகெடுத்து விட்டது)” என்று பெருமையடித்தோரை நோக்கி பலவீனர்கள் கூறுவார்கள். வேதனையை அவர்கள் காணும் போது கவலையை மனதுக்குள் மறைத்துக் கொள்வார்கள். (நம்மை) மறுப்போரின் கழுத்துக்களில் விலங்கிடுவோம்
அல்குர்ஆன்
Leave a comment