Category: Your Kattankudy
-
மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா பாலர் பாடசாலையின் 08 வது கலை விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் மஞ்சந்தொடுவாய்: மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா பாலர் பாடசாலையின் 08 வது கலை விழா 28-11-2014 இன்று வெள்ளிக்கிழமை மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. ஹிழுறியா பாலர் பாடசாலையின் தலைவர் எம்.ஐ.எம்.ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
-
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அமைப்புகளுக்கு உபகரணங்கள் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சமூக சேவை நிறுவனங்கள் , விளையாட்டு கழகங்கள் , சன சமூக நிலையங்கள்,பாலர் பாடசாலைகள் உட்பட 12 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில்….
கொழும்பு: அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் இந்த தீர்மானித்தை எடுத்துள்ளார். தனது தந்தையான காமினி திஸாநாயக்கவின் சிலை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஸ்தாபிக்குமாறும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வெல்லப் போவது யாரு…?
மதியன்பன் அதிகார ஆட்டமும் ஆட்பலமும் பணத்திமிரும் வென்று கொடுக்கும் என்று இவர்கள் வீணாக நம்புகிறார்கள்..
-
கோத்தாவின் பொறாமை அம்பலம்
கொழும்பு: கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பி.கியூ. 6182 என்ற இலக்க லொறி மூலம் எடுத்து வரப்பட்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான சேறுபூசும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த லொறி ஹெவன் காட் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது எனக்கூறப்படுகிறது.
-
முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு பிரதியமைச்சுப் பதவி
– எம். பாரிஸ் ஓட்டமாவடி: முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு பிரதியமைச்சுப்பதவி வழங்கப்பட்டதாக பரவி வரும் செய்தி தொடர்பாக கிழக்கு மாகாண பிரதித்தவிசாளா் எம்.எஸ்சுபைா் அவா்களிடம் தொலைபேசி மூலமாக வினவிய போது அவா் இவ்வாறு தெரிவித்தார். “2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை போட்டியிடச் செய்து முதலமைச்சர் பதவி வழங்குவதாக அரச தரப்பு உறுதியாகக் கூறியிருந்தது”.
-
ஞானசாராவின் ஆதரவு மஹிந்தவுக்கே!
கொழும்பு: யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதனால் ஆடம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார்.
-
திவிநெகும பயனாளிகள் 600 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி 2500 ரூபாய் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப்பொருளில் திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
-
நேற்றுவரை ஜனாதிபதியை புகழ்பாடிய அஸ்வர் எம்.பி. இராஜினாமா!!!
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அஸ்வர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
-
இலங்கை முஸ்லிம்கள் ஏமாறப்போவதில்லை!
– ஏ. அப்துல் ஹமீட் கொழும்பு: காலாகாலமாக தேர்தல்கள் வரும்போதெல்லாம் “பாராளுமன்ற ஜனாஸாக்கள்” என அழைக்கப்படும் முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள், முஸ்லிம்களின் உரிமைக்காவவே தாங்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும் தேர்தல் மேடைகளில் கொக்கரிப்பார்கள்.
-
புனர்நிர்மாணம் செய்யப்பட்டுவரும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 10 இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுவரும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 27-11-2014 இன்று வியாழக்கிழமை பார்வையிட்டார்.
-
காத்தான்குடி பிரதேசத்தில் திவிநெகும பயனாளிகள் 400 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி 2500 ரூபாய் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப்பொருளில் திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.