– எம். பாரிஸ்
ஓட்டமாவடி: முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு பிரதியமைச்சுப்பதவி வழங்கப்பட்டதாக பரவி வரும் செய்தி தொடர்பாக கிழக்கு மாகாண பிரதித்தவிசாளா் எம்.எஸ்சுபைா் அவா்களிடம் தொலைபேசி மூலமாக வினவிய போது அவா் இவ்வாறு தெரிவித்தார். “2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை போட்டியிடச் செய்து முதலமைச்சர் பதவி வழங்குவதாக அரச தரப்பு உறுதியாகக் கூறியிருந்தது”.
“ஆனால், அரசு எதிர்பார்த்த பெரும்பான்மை ஆசனங்களைப்பெற முடியாமற் போனது. இதனால் முஸ்லிம் காங்கிரசினையும் இனணத்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது”.
“இதனால், அமீர் அலியின் முதலமைச்சர் பயணம் தடைப்பட்டது. அதனையடுத்து. கிழக்கு மாகாணத்தில் ஒரு பொம்மை முதலமைச்சரை அரசாங்கம் நியமித்தது. இதன் மூலம் மாகாணத்தின் முஸ்லிம்களது அபிலாஷைகளையும் அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் மாகாண முஸ்லிம்களுக்கு பாரிய அநீதியிழக்கப்பட்டது. இதனையடுத்து கல்குடா முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் குழப்ப நிலை தீவிரமடைந்தது”.
“இதனையடுத்து கல்குடாவுக்கு வருகை தந்த பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசீல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு பிரதியமைச்சு பதவியொன்றினை வழங்குவதாக 2012 ஓக்டோபர் 16ஆம் திகதி ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப்பள்ளி வாயலில் வைத்து கல்குடா முஸ்லிம் மக்கள் முன்னிலையில் வாக்குறுதி வழங்கினார்”.
இதனை அன்று நிறைவேற்றத் தவறிய அரசு, இந்த ஜனாதிபதித்தேர்தலில் அவ்வாக்குறுதியை நிறைவேற்ற அரச தரப்பு முனைகின்றது. கல்குடா மக்களின் அனுமதியில்லாமல் எந்தப்பதவியினையும் முன்னாள் அமைச்சர் அமீா் அலி பெறத்தயாரில்லை”யென கிழக்கு மாகாண சபைப் பிரதித்தவிசாளர் எம்.எஸ்சுபையிர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Published by


Leave a comment