காத்தான்குடி: 10 இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுவரும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 27-11-2014 இன்று வியாழக்கிழமை பார்வையிட்டார்.
இதன் போது குறித்த நிலையத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட பிரதியமைச்சர் அங்கு வேலையில் ஈடுபட்ட கட்டிட பணியாளர்களிடம் நிலையத்தின் புனர்நிர்மாணப் பணிகளை துரிதகெதயில் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிலையத்தின் புனரமைப்பு பணிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் அவரின் நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment