அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில்….

navinகொழும்பு: அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் இந்த தீர்மானித்தை எடுத்துள்ளார். தனது தந்தையான காமினி திஸாநாயக்கவின் சிலை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஸ்தாபிக்குமாறும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவீன், அந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளருமாவார். நவீன் திஸாநாயக்கவின் தந்தையான காமினி திஸாநாயக்க, கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கண்டி ட்ரினிட்டி கல்லூரியில் கல்வி கற்று, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியில் பட்டம் பெற்ற ஓர் சிறந்த சட்டத்தரணியுமாவார். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி இருந்ததுடன் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடத்தப்பட்ட பெண் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

gamini
காமினி திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர் சில காலம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைய உள்ள நவீன் திஸாநாயக்க, போர் நடைபெற்ற காலத்தில் கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட 17 பேரில் ஒருவராவார். இதுவரை அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்து வரும் அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் சம்பந்தமாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

navin
நவீன் திஸாநாயக்க

Published by

Leave a comment