மஞ்சந்தொடுவாய்: மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா பாலர் பாடசாலையின் 08 வது கலை விழா 28-11-2014 இன்று வெள்ளிக்கிழமை மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. ஹிழுறியா பாலர் பாடசாலையின் தலைவர் எம்.ஐ.எம்.ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது பாலர் கலை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக மேற்கொண்ட பாலர்களும்,அவர்ளை நெறிப்படுத்தி ஆசிரியைகளும் ,புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால்; பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. நடராஜா சியாமினி உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment