வெல்லப் போவது யாரு…?

mathyமதியன்பன்

அதிகார ஆட்டமும்
ஆட்பலமும் பணத்திமிரும்
வென்று கொடுக்கும் என்று
இவர்கள்
வீணாக நம்புகிறார்கள்..

கூட்டங்கள் போட்டு
கூடிக்கூடிப் பேசுகிறார்கள்
அனல் தெறிக்கும் உரைகளை
ஆற்றி முடிக்கிறார்கள்..

வீடுவீடாகக் சென்று
மக்களுக்கு
விழிப்பூட்டல் செய்கிறார்கள்
விபரம் தெரியாதவர்களுக்கு
விளக்கம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஆங்காங்கு
புதுப்புது அலுவலகங்கள் திறந்து
அணி திரட்ட
ஆத்மாந்த அறிவுரைகள் செய்கிறார்கள்.

வீதியின் நடுவிலே
பேனர்கள்  வைக்கிறார்கள்
வீட்டுச் சுவர்களையெல்லாம்
போஸ்டர்களால்
போர்த்திவிடுகிறார்கள்

கொள்கையைச் சொல்லி
குடும்பங்களை
குழப்பத்தில் விடுகிறார்கள்
சண்டை பிடித்து
சமூகத்தை உடைக்கிறார்கள்

போதாக்குறைக்கு
பொலிஸ் நிலையம் சென்று வருகிறார்கள்
கோவைகள் இருப்பதால்
சிலர்
குழம்பித் திரிகிறார்கள்

இன்னும் சிலர்
காலை வாரிவிட்டு கழன்று போகிறார்கள்.
முடிவு தெரியாமல் தான்
இத்தனை பேரும்
முட்டி மோதித் கொள்கிறார்கள்

என்றாலும்
அவர்களும் இவர்களுமாய்
அந்த நாளில்
தோற்றுவிடப் போகிறார்கள்
தினமும்
ஐந்து நேரத் தொழுகையில்
அக்கரை காட்டவில்லையென்றால்!

28.11.2014

Published by

Leave a comment