கொழும்பு: கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பி.கியூ. 6182 என்ற இலக்க லொறி மூலம் எடுத்து வரப்பட்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான சேறுபூசும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த லொறி ஹெவன் காட் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது எனக்கூறப்படுகிறது.
பிட்டகோட்டேயில் உள்ள இந்த பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மகிந்த ராஜபக்ஷவின் இரகசியமான தேர்தல் பிரசார பிரிவாக செயற்பட்டு வருவதாக தெரியவருகிறது. அத்துடன் இந்த பாதுகாப்பு நிறுவனம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் விசேட தேர்தல் நடவடிக்கைகளில் சிலர் பிரத்தியேகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மாதாந்தம் தலா ஒரு லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் என்ன விலை கொடுத்தாவது மஹிந்தவை வெற்றி பெறச் செய்ய கோத்தாபாய எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஆபத்தானதாகவும் அமையலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
Published by

Leave a comment