Category: Your Kattankudy
-
ஜனநாயகக் கட்சியின் முதலாவது காரியாலயம் செங்கலடி பிரதேசத்தில் திறக்கப்பட்டது
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் செங்கலடி: முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள், ‘ஃபீல்ட் மார்ஷல்’ எனத் தரமுயர்த்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் ஜனநாயகக் கட்சிக்கான முதலாவது காரியாலயம், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான், காரைக்காடு கிராமத்தில் எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.
-
மூதூர் பாலகிக்கு சிபார்சு வழங்க அநுரகுமார திசநாயக்கா: முன்னாள் கிராம உத்தியோகத்தர் அஸீஸ் தகவல்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மூதூர்: முன்னர் தெரிவிக்கப்பட்ட மூதூர் ஷாபி (நூறானியா) நகரைச் சேர்ந்த பாத்திமா ஸஹா எனும் 7 மாதக் குழந்தையின் அவசர இருதய சத்திர சிகிச்சைக்கு சிபார்சு செய்யும் விடயமாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரனுடன் தான் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,
-
உயிருக்காகப் போராடும் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஒரு எம்.பி.யின் சிபார்சு தேவை
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மூதூர்: மூதூர் ஷாபி (நூறானியா) நகரைச் சேர்ந்த பாத்திமா ஸஹா எனும் பெயருடைய 07 மாதக் குழந்தை, இருதய சத்திர சிகிச்சைக்காக கொழும்பு நோனா வார்டில் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
வடக்கில் 425 ஏக்கர் காணி ஆரம்ப குடியிருப்பாளர்களுக்கு கையளிப்பு
– எம்.ஐ.அப்துல் நஸார் யாழ்ப்பாணம்: வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயிரம் ஏக்கர் காணியை ஆரம்ப குடியிருப்பாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டமாக 425 ஏக்கர் காணியை விடுவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனை தலைமையில் இன்று (23) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
-
எதிர்கட்சித் தலைவர் பதவி தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட வேண்டும் – கூட்டமைப்பின் சிறு கட்சிகள் கோரிக்கை
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: ஸ்ரீலங்கா சுததந்திரக கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்துள்ளதால் நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பது முறையல்ல எனவே பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணக்கார தெரிவித்தார்.
-
ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு நிர்வாகிகள்
காத்தான்குடி: ‘ஃபீலட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு, கடந்த 20.03.2015 வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்புத் தொகுதிக்கான மேற்படி கட்சியின் அமைப்பாளர் ஜனாப். எம்.எஸ்.எம். ஷாபி அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
-
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஓர் சிறந்த தலைவர் அமைச்சர் றிஷாத்
– அபூ அஸ்ஜத் கொழும்பு: இலங்கை அரசியலில் இன ரீதியான செயற்பாடுகள் அற்ற அரசியல் வாதிகளை காணுவது என்பது மிகவும் அரிதாகும்.இந்த வகையில் இன்றைய அரசியலில் பேசப்படும் ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றார் என்பதை சிங்கள மக்களும் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.
-
“என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது”
– இர்ஷாத் ரஹ்மதுல்லா மதுரங்குளி: “என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது” என தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ், நான் மாகாண சபையின் உறுப்பினராக தெரிவாவதற்கும் காரணமாக இருந்தவரும் அவரே என்றும் கூறினார்.
-
அரையிறுதிப் போட்டிக்கு நடுவராக குமார் தர்மசேனா
சிட்னி: இந்திய-அவுஸ்திரேலிய அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிக்கு இலங்கையின் குமார் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் 24ஆம் திகதி நடக்கும் முதல் அரையிறுதியில் நியுசிலாந்து, தென்னாபிரிக்காவும், 26ஆம் திகதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய-அவுஸ்திரேலிய அணிகளும் மோதுகின்றன.
-
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ள சிட்னி ஆடுகளத்தை வேகப் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்றுமாரு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிப்பு!!
சிட்னி: சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ள சிட்னி ஆடுகளத்தை வேகப் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்றுமாறு அதன் பராமரிப்பாளருக்கு அவுஸ்திரேலிய வீரர்கள் வேண்டுகோள் விடுத்தும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
-
26 சு.க உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவு; அமைச்சுக்களும் ஏற்பு (முழு விபரம்)
கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் நேற்று அரசாங்கத்தில் இணைந்துகொண்டதோடு அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்துள்ள 11 அமைச்சுப் பொறுப்புக்களும், 5 இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களும், 10 பிரதி அமைச்சுப் பொறுப்புக்களையும் இவர்கள் ஏற்றுள்ளனர்.