ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு நிர்வாகிகள்
காத்தான்குடி: ‘ஃபீலட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு, கடந்த 20.03.2015 வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்புத் தொகுதிக்கான மேற்படி கட்சியின் அமைப்பாளர் ஜனாப். எம்.எஸ்.எம். ஷாபி அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது பின்வருவோர் ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: எம்.ஏ.எம். மிப்ஷி
உப தலைவர்: எம்.சீ.எம். அஸ்லம்
பொதுச் செயலாளர்: புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
உப செயலாளர்: எம்.எம். பளீல்
பொருளாளர்: எம்.ஜே.எம். அக்றம்
நிர்வாக சபை உறுப்பினர்களாக அல்ஹாஜ். எம்.ஐ. கலீலுர்ரஹ்மான், என்.ரி. பௌசுல் அமீன், டாக்டர். ரி.ஏ. சராவுடீன், ஏ.ஐ.எம். ஹிஸாம், ஏ.என்.ஏ. நாஸிர், எம்.எம்.எம். முனீர், ஏ.எல்.எம். இல்ஹாம், எம்.எஸ்.எம். அலி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
Leave a comment