அரையிறுதிப் போட்டிக்கு நடுவராக குமார் தர்மசேனா

dharmasenaசிட்னி: இந்திய-அவுஸ்திரேலிய அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிக்கு இலங்கையின் குமார் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் 24ஆம் திகதி நடக்கும் முதல் அரையிறுதியில் நியுசிலாந்து, தென்னாபிரிக்காவும், 26ஆம் திகதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய-அவுஸ்திரேலிய அணிகளும் மோதுகின்றன.

இதன்படி இந்திய அணி மோதும் அரையிறுதியில் இலங்கையின் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக செயல்படவுள்ளனர். மூன்று, நான்காவது நடுவர்களாக எராஸ்மஸ் (தென்னா பிரிக்கா,), இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) நியமிக்கப்பட்டனர். போட்டி மத்தியஸ்தராக ரஞ்சன் மடுகல்ல (இலங்கை) உள்ளார்.

Published by

Leave a comment