எதிர்கட்சித் தலைவர் பதவி தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட வேண்டும் – கூட்டமைப்பின் சிறு கட்சிகள் கோரிக்கை

parliament– எம்.ஐ.அப்துல் நஸார்

கொழும்பு: ஸ்ரீலங்கா சுததந்திரக கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்துள்ளதால் நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பது முறையல்ல எனவே பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணக்கார தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில ஆகியோர் பங்குபற்றிய ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இக் கருத்து வெளியிடப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அடுத்த கூட்டம் எதிர்வரும் 26ஆந் திகதி இரத்தினபுரியில் நடாத்தப்படுமென தெரிவிப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Published by

Leave a comment