இக்குழந்தைக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்து உயிர்பிழைக்கச் செய்ய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிபார்சு தேவைப்படுவதாக இக்குழந்தையின் தந்தை எஸ்.எச். நௌபர் தெரிவிக்கின்றார்.
கடந்த சில தினங்களாக கொழும்பில் நின்றவாறு ஒரு எம்.பியைத் தொடர்பு கொண்டு தனது நிலைமையை விவரிக்க பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டும் தன்னால் அது முடியாமல் போயுள்ளதாகவும், எனவே இக்குழந்தையின் உயிர்காக்க எவராவது ஒரு எம்.பி அல்லது நாட்டிலுள்ள 225 எம்.பிக்களில் எவருடனாவது நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள பிரபலஸ்தர்கள் முன்வந்து உதவுமாறும் அவர் ஊடகங்கள் மூலம் கருணைக் கோரிக்கை விடுக்கின்றார்.
இவ்வேண்டுகோள் பற்றிய மேலதிக விவரங்களைப் பெற 075 0656567 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
Published by

Leave a comment