வடக்கில் 425 ஏக்கர் காணி ஆரம்ப குடியிருப்பாளர்களுக்கு கையளிப்பு

north– எம்.ஐ.அப்துல் நஸார்

யாழ்ப்பாணம்: வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயிரம் ஏக்கர் காணியை ஆரம்ப குடியிருப்பாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டமாக 425 ஏக்கர் காணியை விடுவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனை தலைமையில் இன்று (23) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான எம.கே.டீ.எஸ்.குணவர்தன, பீ.எம்.சுவாமிநாதன், பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிகக்கார, வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்குபற்றினர்.

Published by

Leave a comment