அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஓர் சிறந்த தலைவர் அமைச்சர் றிஷாத்

rishad– அபூ அஸ்ஜத்

கொழும்பு: இலங்கை அரசியலில் இன ரீதியான செயற்பாடுகள் அற்ற அரசியல் வாதிகளை காணுவது என்பது மிகவும் அரிதாகும்.இந்த வகையில் இன்றைய அரசியலில் பேசப்படும் ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றார் என்பதை சிங்கள மக்களும் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.

அண்மையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பொதுபலசேனா உள்ளிட்ட இன்னும் பல அமைப்புக்களுக்கு எதிராக துணிந்து பேசியவர் என்ற வகையில் அவர் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் அள்ளி வீசப்பட்டுவந்தன.இருந்த போதும் பெரும்பான்மையான சிங்கள் மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு நேர்மையான அரசியல் தலைவர் என்பதை தெரிவித்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

குறிப்பாக வடக்கில் வாழும் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை சூழ்ந்து அபிவிருத்தி மற்றும் அடிப்படை வசதிகள் அனுபவித்துவருகின்றனர்..ஆனால் சில மதவாத அடிப்படை அமைப்புக்கள் இந்த மக்களுக்கு கிடைக்கின்றவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி இதனை தடுக்கும் கைகங்கரியத்தை செய்து வருகின்றனர்.

rishad

வடக்கில் 30 வருட யுத்தத்தால் இழந்து போனவற்றை மீட்டெடுக்கின்ற போராட்டத்தில் தன்னந்தனியனாக நின்று அமைச்சர் றிசாத் பதியுதீன் சகல மக்களும் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற போது,குறிப்பட்ட ஒரு சமூகத்துக்கு மட்டும் பணியாற்றுவதாக அபாண்டங்களை சுமத்திவருகின்றதையும் நாம் ஊடகங்கள் மூலம் காணுகின்றோம்.அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு சமூகத்திற்கு மட்டும் செய்தவர் அல்ல என்பதை வடக்கில் வாழும் சிங்கள மதத்தலைவர்கள் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.அதே போல் சிங்கள மக்கள் அமைச்சரின் கரத்தை பலப்படுத்த அணியாக வந்து சேர்வதை காணமுடிகின்றனர்.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியில் பலம் மிக்க ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்தார்.அதே போல் அப்போதைய ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினை பயன்படுத்தி வன்னி மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கும் தேவையான பணிகளை ஆற்றியுள்ளார்.தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் இதுவரைக்கும் செய்யாத எத்தனையோ பணிகளை இம்மக்களுக்கு ஆற்றியுள்ளதை தமிழ் மக்கள் தொடர்ந்து தேர்தலிகளின் போது அமைச்சர் றிசாத் பதியுதீனை ஆதரித்துவந்துள்ளனர்.

rishad (2)

தற்போதைய காலத்தில் வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள்,மற்றும் அரசியல் வங்குரோத்து காரர்கள் அரசாங்கத்தையோ,ஜனாதிபதியினையே குற்றம் சொல்ல முடியாத நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து இல்லாத பொல்லாத கதைகளை இட்டுக்கட்டி வருகின்றனர்.

இந்ந நிலையில் வவுனியா சிஙகள பிரதேச மக்கள் அமைச்சரின் சேவையினை பாராட்டியுள்ளதுடன்,வன்னி மாவட்ட மக்களின் ஏகோபித்த அரசியல் தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீனை ஏற்றுக்கொண்டுள்ளனர.அண்மையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் வவுனியா சிங்கள பிரதேசங்களுக்கு விஜயம் செய்த போது அங்குள்ள மக்கள் தமது அரசியல் தலைவருக்கு வழங்கிய வரவேற்பும் ஆதரவும்,அமைச்சர் இந்த மக்களுக்கு ஆற்றியுள்ள அளப்பறிய அபிவிருத்தி பணிகளின் வெளிப்பாடாகும்.

சில அரசியல் பின்னடைவு கொண்டவர்கள் அமைச்சருக்கு எதிராக செயற்பட்ட போதும் மக்களின் அலை அமைச்சரின் பக்கம் இருக்கின்றது என்பது அவர் ஆற்றியுள்ள பணிகள் சான்றாகவுள்ளது.இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் எமது மக்கள் ஒன்றுபட்டு அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டு விடுபட்டுள்ள அபிவிருத்திகளை சகல கிராமங்களுக்கும் தொட்டுச் இல்லும் வகையில் பயணிக்கும் தருனத்தினை அடைந்துள்ளோம்.

Published by

Leave a comment