சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ள சிட்னி ஆடுகளத்தை வேகப் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்றுமாரு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிப்பு!!

cricket (2)சிட்னி: சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ள சிட்னி ஆடுகளத்தை வேகப் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்றுமாறு அதன் பராமரிப்பாளருக்கு அவுஸ்திரேலிய வீரர்கள் வேண்டுகோள் விடுத்தும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

உலகக் கிண்ண போட்டியில் வரும் 26ஆம் திகதி சிட்னியில் நடை பெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது.

வேகப்பந்து வீச்சில் மிரட்டும் அவுஸ்திரேலிய அணியில் சுழற் பந்துவீச்சுக்கு என்று பெரியதாக யாரும் இல்லை. ஆனால் இந்தியாவை பொறுத்த வரை அஸ்வின், ரவீந்தரா ஜடேஜா போன்றவர்கள் சுழற்பந்தில் சோபித்து வருகின்றனர்.

cricket (2)

இந்நிலையில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஆடுகள தன்மையை சற்று வேகப் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்ற சிட்னி மைதானத்தின் ஆடுகள பராமரிப் பாளர் டொம் பார்க்கரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதனை ஏற்க, டாம் பார்க்கர் மறுத்து விட்டார். சிட்னி ஆடுகளம் எனது குழந்தை போன்றது. அதன் தன்மையிலேயே அதனை இருக்க விடுங்கள் என்று மறுப்பு தெரிவித்தாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட், இந்த டாம் பார்க்கர் ஒரு முறை கூட அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது இல்லை. ஆடுகளத்தில் சிறிது புல் இருந்தால் கூட வேகப்பந்துக்கு சற்று சாதகமாக இருக்கும். ஆனால் அதனை கூட டொம் பார்க்கர் ஏற்கவில்லை என்று புலம்பி தீர்த்துள்ளார்.

Published by

Leave a comment