Category: Your Kattankudy
-
நியூஸிலாந்தின் உலகக் கிண்ண கனவை தகர்த்து 5ஆவது முறையாக சம்பியன் மகுடத்தை சூடியது அவுஸ்திரேலியா
மெல்போர்ன்: 11ஆவது உலகக் கிண்ணஉகிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் ஆரம்பமானது. ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த 2015 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது.
-
எமது நிலம் சீனாவுக்கு உரித்தாக முடியாது
பீஜிங்: இலங்கைக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பொருத்தமான முறையில் போர்ட் சிட்டி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் அவசரமாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்ட ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பொருத்தமில்லாத அம்சங்கள் பல உள்ளன.
-
அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு!!!
கொழும்பு: புதிய அமைச்சர் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சீன விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியதும் இந்த புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பைஸர் முஸ்தபாவுக்கு இம்முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படும் என பேசப்படுகிறது.
-
“எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது வந்தே தீரும்”
கொழும்பு: பாராளுமன்ற விதிமுறை களின் படி எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பத வியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். அத்துடன் பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் அப்பதவி எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், பாராளு மன்ற விதிகள் இருக்கும் போது தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் செல்லுபடியற்றதாகிவிடும்.
-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி இளைஞா் கழகங்களின் சம்மேளன புனரமைப்பு கூட்டம்
– எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி இளைஞா் கழகங்களின் சம்மேளன புனரமைப்பும்,புதிய நிருவாக சபைத் தெரிவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 31.03.2015 பி.ப 2.00 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச சம்மேளனத்தின் தலைவா் எம்.ஐ.எம்.றனீஸ் தலைமையில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
புலிகள் மீது மீண்டும் ஐரோப்பியத் தடை: ” புதிய இலங்கை அரசின் ராஜாங்கவெற்றி
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங்க வெற்றி என வெளியுறவுத் துறைக்கான புதிய துணை அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
-
காத்தான்குடி தோனா மற்றும் வடிகான் அபிவிருத்தி தொடர்பில் யு.எல்.எம்.என்.முபீன் தீவிர முயற்சி: அமைச்சர் றவுப் ஹக்கீம் அங்கீகாரம்
ஏ.எல். டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திற்கான வெள்ள தடுப்பு நடவடிக்கையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அமைச்சர் றவுப் ஹக்கீம் மேற்கொண்டு வருகின்றார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளரும் அமைச்சரின் இணைப்பு செயலாளருமான யு.எல் எம்..என்.முபீன் வேண்டுகோளின் பேரினில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
-
விரைவில் இலங்கை வருவேன், வாக்குமூலமும் வழங்குவேன் : பஷில்
கொழும்பு: திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக்குற்ற விசாரணைக்கு தேவையான வாக்குமூலத்தை வழங்குவதற்காக மிக விரைவில் இலங்கை வரவுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
தலையில் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் சகோதரர் மரணம்
கொழும்பு: கோடாரியால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன உயிரிழந்தார். பொலநறுவை நகரில் வசித்துவந்த பிரியந்த சிறிசேன, வியாழக்கிழமையன்று கோடாரியால் தலையில் தாக்கப்பட்டார்.
-
காத்தான்குடியில் அஞ்சற்காரர்களை ஒன்லைன் வலையமைப்புடன் இணைத்துள்ளதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு தங்களது சேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன் அஞ்சற்காரர்களை ஒன்லைன் வலையமைப்புடன் இணைத்துள்ளதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் 28/03/2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றது.
-
JDIK நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாதாந்த தர்பிய்யா ஒன்று கூடல்
எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா: மட்டக்களப்பு, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவகத்தின் தஃவாப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த மாதாந்த தா்பிய்யா ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (27) மீராவோடை தாருஸ்ஸலாம் ஜூம்ஆப்பள்ளிவாயளில் நடை பெற்றது.
-
“காத்தான்குடி நகரசபை தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்து வேடிக்கையானது; அவர் ஒத்துழைத்தால் ஊழல் மோசடிகளை நிரூபிக்க தயார்” நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: “காத்தான்குடி நகரசபையினை ஊழல்-மோசடிகள் எதுவுமின்றி கடந்த நான்கு ஆண்டுகளாக தான் நிர்வகித்ததாக அதன் தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்து அப்பட்டமான பொய் மாத்திரமின்றி வேடிக்கையான ஒன்றுமாகும். மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற முயற்சிகளை கைவிட்டு, நகரசபையின் நடவெடிக்கைகளை முழுமைமான நிதிப்பரிசோதனைக்கும் தொழில் நுட்ப ஆய்வுக்கும் உட்படுத்த அவர் முன்வர வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.