Category: Your Kattankudy
-
கோத்தாவின் வங்கி கணக்குகளை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு
கொழும்பு: முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி. எம். எஸ். ஜயரத்ன அடங்கலாக எவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அனைவரினதும் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு காலி நீதவான் நீதிமன்றம் நேற்று சி. ஐ. டி.க்கு அனுமதி வழங்கியது.
-
மூன்றாம் ரிச்சர்ட் – ஒரு மறு அடக்கத்தின் கதை
லெஸ்டர்: பிரிட்டனில் நேற்று ( வியாழன்) ஒரு மன்னனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட்து. ஆனால் தற்போதைய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இறந்துவிடவில்லை. அடக்கம் செய்யப்பட்ட எலும்புக்கூடு , 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த அரசர் ஒருவருக்குச் சொந்தமானது.
-
துவிச்சக்கர வண்டிகளுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையும் இலங்கை பொலிஸூம் இணைந்து விபத்துக்களற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் துவிச்சக்கரவண்டிகளில் எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் வியாழக்கிழமை (26), காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்றது.
-
உலகக் கோப்பை தோல்வி: டோணி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
– AF-70 ராஞ்சி: அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டதையடுத்து இந்திய அணியின் தலைவர் டோணியின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
-
‘ஜெர்மன்விங்ஸ் விமானம் இரண்டாம் விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது ‘
பரிஸ்: பிரெஞ் அல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி ” வேண்டுமென்றே விமானத்தை அழிக்க” விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். கீழே விழுந்த விமானத்தின் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒலிகளை ஆராய்ந்த பின்னர் கருத்து வெளியிட்ட மர்செய் நகர அரச சட்ட நடவடிக்கை
-
இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது அவுஸ்திரேலியா!
சிட்னி: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவிடம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.சிட்னியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில், வெல்வதற்கு 329 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
-
மஹிந்த ராஜபக்ஷ பிரதம வேட்பாளராக வேண்டும் என வலியுறுத்தி இரத்தினபுரியில் அமைக்கப்படும் 3 மேடைகள்!
– எம்.ஐ. அப்துல் நஸார் இரத்தினபுரி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம வேட்பாளராக வேண்டும் என வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினால் நடாத்தப்படும் மூன்றாவது கூட்டத்திற்காக இரத்தினபுரியில் சீவலி மைதானத்தில் மூன்று மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அமைப்பக்கப்பட்டுவரும் இம்மேடைகளை படங்களில் காணலாம்.
-
அவுஸ்திரேலியா அபார ஆட்டம்
சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் அபாரமாக ஆடியிருக்கும் அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட்களை இழந்து 328 ரன்களைக் குவித்துள்ளது. இன்று சிட்னி நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, துடுப்பாட்டத்தைத் தேர்வுசெய்தது. ஆட்டம் துவங்கி சிறிது நேரத்திலேயே, நான்காவது ஓவரில் யாதவ் வீசிய பந்தில் வார்னர் ஆட்டமிழந்தார். அவர் அப்போது பன்னிரண்டு ரன்களை எடுத்திருந்தார்.
-
அல்மனார் மற்றும் ஹிறா பவுண்டேசன் இணைந்து நடாத்தும் போட்டி நிகழ்ச்சி
– ஏ.எல். டீன் பைரூஸ் காத்தான்குடி: அல் மனார் நிறுவனமும், ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேசனும் இணைந்து ‘விடியலை நோக்கிய சமூகம்’ எனும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக ‘பழாயிலுஸ் ஸஹாபா’ போட்டி நிகழ்ச்சியொன்றினை நடாத்ததிட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.
-
“இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 2 அல்லது 3 காதி நீதிமன்றங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை”
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 2 அல்லது 3 காதி நீதிமன்றங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர்,கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்கள் சாரி சாரியாக இன்று இணைந்து கொண்டிருப்பது மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப்
-
உலகக் கிண்ணம் 2வது அரையிறுதிப் போட்டி: நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்
சிட்னி: உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 2வது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
-
முகத்தை மூடி தலைக்கவசம் அணிவது முற்றாக தடை: மீறினால் ரூ. 500/- அபராதம்
கொழும்பு: மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் முழுமையாக முகத்தை மூடக்கூடிய (full face) தலைக்கவசம் அணிவது எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் முற்றாக தடைசெய்யப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அத்துடன் முகத்தை மறைக்கக்கூடிய தலைக்கவசத்தில் பொருத்தப்படும் ‘வைசர்’ கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் திரையும் முகம் தெரியக்கூடியவாறு மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.