காத்தான்குடி தோனா மற்றும் வடிகான் அபிவிருத்தி தொடர்பில் யு.எல்.எம்.என்.முபீன் தீவிர முயற்சி: அமைச்சர் றவுப் ஹக்கீம் அங்கீகாரம்

Mubeenஏ.எல். டீன் பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திற்கான வெள்ள தடுப்பு நடவடிக்கையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அமைச்சர் றவுப் ஹக்கீம் மேற்கொண்டு வருகின்றார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளரும் அமைச்சரின் இணைப்பு செயலாளருமான யு.எல் எம்..என்.முபீன் வேண்டுகோளின் பேரினில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பெரிய தோனா, சிறிய தோனா மற்றும் அவசியமான இடங்களில் வடிகான் அமைத்தல் ஆகிய வேளை திட்டங்கள் முன்னெடுக்கபபடவுள்ளன.

12.02.2015 அமைச்சில் நடைபெற்ற இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் இவ்வேளைத்திட்டம் தொடர்பில் உரிய நடவடிக்ககைகளை மேற் கொள்ளுமாறு அமைச்சர் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அமைச்சரின் இனைப்பு செயலாளர் யு.எல்.என்.எம்.முபீன் ஏற்பாட்டினில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்தில் காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபணத்தின் தலைவர் சட்டத்தரணி சல்மான், பிரதி பிரதம முகாமையாளர் அமரசிங்க, பிரதம திட்ட வரைஞர் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மஜீட், திணைக்களத்தின் பணிப்பாளர திரு ;வெளியப்பளய, கரையோர பாதுகாப்பு திட்ட பணிப்பாளர் பிரேமதிலக உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி, கல்முனை, அட்டாளைச்சேனை, சாய்நதமருது, கிண்ணியா ஆகிய பிரதேசங்களுக்கான வடிகான் மற்றும் தோனா நிர்மாணிப்பு தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

காத்தான்குடிக்கான வெள்ளத்தடுப்பு வருடாந்தம் காத்தான்குடி தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் முழ்கும் நிலமையினையும் அதன் தாக்கங்களையும் யு.எல்.என்.எம். முபீன் சுட்டிக்காட்டினார்.

காணி மீட்பு அபிவிருத்தி கூட்டடுத்தாபன உயர் அதிகாரிகளுக்கு காத்தான்குடிக்கான முழுமையான தோனா வடிகான திட்ட அறிக்கையினையும், மதிப்பீட்டையும் விரைவில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

தோடராக நடைபெற்று வந்த பல்வேறு கூட்டங்களில் பின்னர் காத்தான்குடிக்கான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையினை கடந்த 16.03.2015 அமைச்சர் றவுப் ஹக்கீம் இடம் யு.எல்.என்.எம். முபீன் ஊடாக சமர்பித்தனர். இதன் மொத்த பெறுமதி 2 பில்லியனாகும்.

இதற்கான நிதியினை பெற்றுக் கொள்ள கடந்த 25.03.2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீன விஜயத்தின் மூலமாக நிதியை பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கையினை அமைச்சர் ஹக்கீம் மேற் கொண்டார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் றவுப் ஹக்கீம் அவர்களுக்கும் இலங்கைக்கான சீன தூதுவரு;கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கு முன்னதாக நகர அபிவிருததி நீர் வழங்கள் அமைச்சில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் கொழும்பில் தடைப் பெற்றிருக்கும் (fort city ) சீன கடல் நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அத்திட்டத்தினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் றவுப் ஹக்கீம் தங்களுக்கு உதவ வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக பாராளு மன்றத்திலும் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும என்றும் அமைச்சர் றவுப் ஹக்கிமிடம் சீன தூதுவர் வேண்டிக் கொண்டார்.

அதற்கு சாதகமாக பதில் அளித்த அமைச்சர் இது தொடர்பில தான் முக்கிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அதே நேரத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திற்கு சீன அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் அமைச்சர் றவுப் ஹக்கீம் கோரிக்ககை வைத்தார்.fort city அபிவிரத்திக்கான செலவு 1.6 பில்லியன் மாத்திரமே. ஆனால், காத்தான்குடி தோனா மற்றும் வடிகான் அபிவிருத்திற்கு தேவைப்படுவதோ 2 பில்லியன் ஆகும்.

ஜனாதிபதியுடன் சீனாவுக்கான விஜயம் மேற்கொன்டுள்ள அமைச்சர் றவுப் ஹக்கீம், இவை தொடர்பில் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளரும் அமைச்சரின் இணைப்பு செயலாளருமான யு.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

Published by

Leave a comment