கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி இளைஞா் கழகங்களின் சம்மேளன புனரமைப்பு கூட்டம்

youth– எம்.ரீ.எம். பாரிஸ்

ஓட்டமாவடி: கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி இளைஞா் கழகங்களின் சம்மேளன புனரமைப்பும்,புதிய நிருவாக சபைத் தெரிவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 31.03.2015 பி.ப 2.00 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச சம்மேளனத்தின் தலைவா் எம்.ஐ.எம்.றனீஸ் தலைமையில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளா் பிரிவில் 2015ஆம் ஆண்டுக்கான புதிய கிராம மட்ட இளைஞா் கழங்களை பதிவு செய்யும் புதிய சுற்று நிரூபத்தின் அடிப்படையில் இம் முறை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளா் பிரிவில் 2015ஆம் ஆண்டில் 10 கழகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பத்து கழகங்களில் இருத்து தலைவா்,உபதலைவா்,செயலாளா்,உபசெயலாளா்,பொருளாளா், மற்றும் அமைப்பாளா் என்ற அடிப்படையில் ஒரு இளைஞா் கழகத்தை பிரதிநிதித்துவ படுத்தி ஆறு பேர் மாத்திரம் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என இளைஞா் சேவை அதிகாரி ஏ.எம்.ஹனிபா கூட்டத்திற்கான அறிவுறுத்தல் கடிதங்களை தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபை அங்கத்தவா்களுக்கு தனிதனி கடிதங்கள் தபால் மூலமாகவும்,நேரடியாகவும் வழங்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளா் எம்.எம்.நௌபா்,மட்டு,மாவட்ட தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளா் எம்.என்.எம்.நைறூஸ் உள்ளிட்ட மாவட்ட இளைஞா் சேவை அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment