பீஜிங்: இலங்கைக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பொருத்தமான முறையில் போர்ட் சிட்டி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் அவசரமாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்ட ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பொருத்தமில்லாத அம்சங்கள் பல உள்ளன.
சூழல் மற்றும் ஏனைய மதிப்பீட்டுகளை மறந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பது தவறான ஒன்று எனவும் ஜனாதிபதி சீன ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான முதலா வது ஒப்பந்தத்தில் காணப்படும், காணி உரிமை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும். இலங்கை அரசின் எந்தவொரு காணியும் வேறு ஒரு அரசுக்கு உரிமையாக்கப்பட முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
Published by


Leave a comment