JDIK நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாதாந்த தர்பிய்யா ஒன்று கூடல்

unnamedஎம்.ரீ.எம்.பாரிஸ்

கல்குடா: மட்டக்களப்பு, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவகத்தின் தஃவாப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த மாதாந்த தா்பிய்யா ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (27) மீராவோடை தாருஸ்ஸலாம் ஜூம்ஆப்பள்ளிவாயளில் நடை பெற்றது.

ஆண்கள், பெண்கள் என இரு அமர்வுகளாக நடைபெற்ற இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியானது பி.ப. 04.00-6.00 மணிவரை பெண்களுக்காக ‘இல்லத்தரசிகளுக்கு இஸ்லாம் கூறும் கடமைகள்’ எனும் தலைப்பிலும் ஆண்களுக்கான நிகழ்வு மஃரிப் தொழுகையை தொடர்த்து இரவு 9.00 மணிவரை நடை பெற்றது.

அஸ்ஸெய்க் ஏ.எல். பதுருதீன் (ஸஹ்வி) தலைமையில் நடை பெற்ற இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வில் தொழுகை ஒரு சுமையா? எனும் தலைப்பில்  ஹொரவப்பொத்தானை ரஸீதியா அரபுக்கல்லூரியின் அதிபா் அஸ்ஸெய்க்  ஏ.எம். அப்துல் கனி (ஹாமி) அவா்களும், ‘நல்லமல்களை நாசமாக்கும் துர்க்குணங்கள்’ எனும் தலைப்பில் மருதமுனை தாருல் ஹூதா மகளிர் அரபு கல்லூரியின் விரிவுரையாளா் அஸ்ஸெய்க் எஸ்.எல். நஸ்மல் (பலாஹி) அவா்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். இச்சன்மார்க நிகழ்வில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment