விரைவில் இலங்கை வருவேன், வாக்குமூலமும் வழங்குவேன் : பஷில்

Basil[1]கொழும்பு: திவி­நெ­கும திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக்­குற்ற விசாரணைக்கு தேவை­யான வாக்குமூலத்தை வழங்­கு­வ­தற்­காக மிக விரைவில் இலங்கை வரவுள்ளதாக முன்னாள் பொரு­ளா­தார அபிவிருத்தி அமைச்­சரும் கம்பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடு­வலை நீதிவான் நீதி­மன்­றத்தில் இருந்து விடுக்­கப்­பட்ட உத்­த­ரவு கம்­ப­ஹாவில் உள்ள தமது அலு­வ­ல­கத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உரிய முறையில் பெற்றுக்கொண்டுள்ளதா­கவும் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

மேலும் தற்­போது அமெ­ரிக்­கா­வுக்குச் சென்றுள்ள பஷில் ராஜ­பக் ஷ விரைவில் இலங்கை வந்தவுடன் திவி­நெ­கும திணைக்களத்தில் இடம்­பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக்குற்ற விசாரணைக்கு தேவை­யான வாக்கு மூலத்தை வழங்­க­வுள்­ள­தா­கவும் இதனை அவர் தனது சட்டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாலித்த பெர்­னாண்­டோ­ ஊ­டாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரி­வுக்கு அறி­வித்­துள்­ள­தாக தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பிர­திகள் பொலிஸ் மா அதி­ப­ருக்கும் சட்­டமா அதிபருக்கும் அனு­ப்பப்­பட்­டுள்­ளன.

திவி­நெ­கும திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்­பான விசாரணைகளுக்கு முழு­மை­யான ஒத்துழைப்பை வழங்­க­வுள்­ள­தா­கவும் அவர் தெரிவித்துள்ளார். இதே­வேளை தற்சமயம் வெ ளிநாட்டில் தங்கியுள்ள பஷில் ராஜபக்ஷவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்கான உத்­த­ரவை கடு­வலை நீதிவான் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

Published by

Leave a comment