காத்தான்குடி: தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு தங்களது சேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன் அஞ்சற்காரர்களை ஒன்லைன் வலையமைப்புடன் இணைத்துள்ளதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் 28/03/2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி தபாலகம் மற்றும் புதிய காத்தான்குடி உப தபாலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச தபால் அதிபர் கே.எம். மஸாஹிர் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபர் வி. விவேகானந்தலிங்கம், மட்டக்களப்பு பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகன் உட்பட காத்தான்குடி தபாலகம் மற்றும் புதிய காத்தான்குடி உப தபாலகங்ளில் கடமையாற்றும் அஞ்சற்காரர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி தபால் நிலையத்திலிருந்து ஆரம்பமான இவ் ஊர்வலம் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பல்வேறு வீதி வழியாக சென்றது.
இதன் போது ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் வீதிகளில் பயணித்தோரிடம் தபால் வியாபார மேம்படுத்துதல் திட்டத்தின் விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
குறிப்பு தபால் வியாபார மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், வீட்டில் இருந்தவாறே தபால்களை வீட்டுக்கு கொண்டுவரும் அஞ்சற்காரர்களிடம் எதுவித மறைமுகக் கட்டணங்கள் இன்றி ஒன்லைன் கொடுப்பனவு சேவை ஊடாக மின்சாரப் பட்டியல், ஸ்ரீலங்கா டெலிகொம் பட்டியல், மொபிடல் பட்டியல், பொபிடல் றீலோட் போன்ற சேவைகளை பெறமுடியும்.
Published by

Leave a comment