Category: Your Kattankudy
-
புற்றுநோயால் தவிக்கும் மகளுக்காக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸி. வீரர் ஹடின்
சிட்னி: அவுஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் பிரட் ஹடின் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் டெஸ்ட் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கில்கிறிஸ்டுக்கு பிறகு அவுஸ்திரேலியாவின் நம்பிக்கைக்குரிய விக்கெட் காப்பாளாராக செயல்பட்டவர் பிரட் ஹடின் (37).
-
வசிம் தாஜுதீன் வழக்கு: சாட்சிக்கு அச்சுறுத்தல்
கொழும்பு: ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீன் கொலை வழக்கில் பிரதான சாட்சி ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரச தரப்பு வழக்கறிஞர் இதனைத் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் மொஹமத் மிஸ்பாக் தெரிவித்தார்.
-
அப்ரிடிக்கும் அர்ஷி கானுக்கும் தொடர்பு?
மும்பை: இந்திய நடிகை அர்ஷி கான் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான சஹீட் அப்ரிடியுடன் தான் தொடர்பு வைத்திருப்பதாக வெளியிட்டுள்ள கருத்தினால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து மும்பையைச் சேர்ந்த அர்ஷி கான் நேற்று (08) மாலை தனது ட்விற்றர் கணக்கில், தான் அப்பிரிடியுடன் உடலுறவு கொண்டதாகவும்,
-
குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் பணிப்பெண்களாக வேலைக்குச் சென்று நிர்க்கதியான 136 பேர் இன்று இலங்கை திரும்பினர்
கொழும்பு: மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் பணிப்பெண்களாக வேலைக்குச் சென்று நிர்க்கதியான 136 பேர் இன்று (10) காலை இலங்கை வந்தனர். இவர்களில் சவூதியிலிருந்து 40 பேரும் குவைத்திலிருந்து 96 பேரும் இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளனர். குவைத்திலிருந்து வந்த 96 பேரிற்கும் இலங்கை வருவதற்கான விமான டிக்கட்டினை அந்நாடு இலவசமாக வழங்கியதாக அங்கிருந்து வந்தோர் தெரிவித்தனர்.
-
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 4 பேர் பலி
கொழும்பு: கொழும்பு-மினுவங்கொடை வீதியின் மிரிஸ்வத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்குச் சொந்தமான டிபென்டர் வாகனமொன்று, மினுவங்கொடை மிரிஸ்வத்தை பகுதியில் இன்று (10) காலை விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, அப்பிரிவைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 5 பேர் அதிக காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான “SL YOUTH” அமைப்பின் அன்பான வேண்டுகோள்
காத்தான்குடி: இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களிடம் இருந்து உங்களால் பயன்படுத்தப் பட்ட உயர்தர பாடப் புத்தகங்கள், வினாவிடை நூற்கள், கடந்த கால வினாவிடை நூற்கள் போன்றவைகள் சேகரிக்க பட்டு சொந்த செலவில் இவைகளை கொள்வனவு செய்ய முடியாமல் கஷ்டப் படும் வறிய மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் முன்னெடுக்க பட்டுவருகின்றது.
-
ஜனாதிபதியின் மகளின் பதவி என்ன?
கொழும்பு: அரசாங்கப் பணியாளர்களுடன் இணைந்து சந்துரிக்கா அண்மையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் பல நிகழ்வுகளில் பங்கேற்றார். இந்நிகழ்வுகள் பொலநறுவையில் இடம்பெற்றன. இதன்போது கருத்துரைத்துள்ள சத்துரிக்கா, தமது தந்தையின் கனவை நனவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள், சத்துரிக்கா சிறிசேனவின் பதவிநிலை குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்னும் உறுதியான தகவல் எதனையும் வழங்கவில்லை.
-
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் மலைப்பாம்பு!
கொழும்பு: நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று காலை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் படகு ஒன்றில், எடுத்துச் செல்லப்பட்ட பாம்பு தியவன்ன ஓயாவுக்கு அந்த கரையில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.
-
மஹிந்தவுக்கு சரியான பாடம் புகட்டிய ஆசான் அமீர் அலி மீண்டும் அமைச்சரானார்!
எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா: இலங்கையின் நல்லாட்சிக்கான அரசியல் பயனத்தில் அமீா்அலி அரசியல் ரீதியிலான சமயோசித முடிவுகள் சிறப்பானதாக அனைவராலும் குறிப்பாக சிறுபான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லிம் மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
-
பிரிட்டனின் நீண்டகால அரசி இரண்டாம் எலிசபெத்
லண்டன்: பிரிட்டிஷ் சரித்திரத்தில் முடிசூடி நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் மகாராணியார் இன்று பெறுகிறார். தனது எள்ளுப்பாட்டியான விக்டோரியா மகாராணியாரின் சாதனையை அவர் கடந்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியாக 23,226 நாட்கள் 16 மணி 30 நிமிடங்களாக (63வருடங்கள்) ஆட்சியில் தொடார்ந்து அவர் சாதனை படைத்து வருவதை குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் பிரிட்டனில் நடந்துவருகின்றன.
-
மாணவி பாத்திமா நுஆவுக்கு அமைச்சர் ரிஷாத் பாராட்டு
கொழும்பு: அண்மையில் நடை பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரதிசில் பரீட்சையில் சித்தியெய்த முஹம்மத் தஸ்லீம் பாத்திமா நுஹாவினை பாராட்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களினால் இன்று கொழும்பில் இடம் பெற்ற அமைச்சரின் பதவியேற்கும் நிகழ்வில் பிரஸ்தாப மாணவிக்கு நினைவு பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
-
“முஸ்லிம் சமூகத்தின் மூச்சு முஸ்லிம் காங்கிரஸ்” தலைவருக்கான வாழ்துச்செய்தியில் – இல்மி அஹமட் லெவ்வை
காத்தான்குடி: நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றிருக்கின்ற சி.மு.காங்கிரஸின் தேசியத்தலைவர் கௌரவ அமைச்சர் றவூப் ஹக்கீம் எம்.பி அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என ஸ்ரீ.மு.காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.