புற்றுநோயால் தவிக்கும் மகளுக்காக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸி. வீரர் ஹடின்

haddinசிட்னி: அவுஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் பிரட் ஹடின் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் டெஸ்ட் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கில்கிறிஸ்டுக்கு பிறகு அவுஸ்திரேலியாவின் நம்பிக்கைக்குரிய விக்கெட் காப்பாளாராக செயல்பட்டவர் பிரட் ஹடின் (37).

இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3266 ரன்களும், 126 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 3122 ரன்களும் குவித்த ஹடின், 34 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.இவ்வாண்டு முடிந்த உலக கோப்பை கிரிக்கெட்டுடன் ஹடின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், இவரின் 4 வயது மகள் மியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்ற ஹடின், அடுத்த 4 போட்டியிலும் விளையாடவில்லை. தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஹடின் ஓய்வு பெற்றுள்ளார்.

haddin
பிற மனிதர்களை போல நானும் குடும்பத்திற்குதான் முன்னுரிமை தருவேன்

இது குறித்து இவர் கூறுகையில், பிற மனிதர்களை போல நானும் குடும்பத்திற்குதான் முன்னுரிமை தருவேன். எனது மகள் மருத்துவமனையில் இருந்தபோது அவுஸ்திரேலிய அணிக்காக நூறு சதவீத முழு மனதுடன் விளையாட முடியவில்லை.எனது மகளுடன் இருக்க விரும்புவதால் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறியுள்ளார். பிக் பாஷ் தொடரில் மட்டும் ஹடின் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.SHM

Published by

Leave a comment