Category: Your Kattankudy
-
ஹரம் விபத்து: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
மக்கா: நேற்று மாலை மக்கா ஹரத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை என சவுதி அரேபியாவின் “அரேப் நியூஸ்” சற்று முன்னர் அறிவித்துள்ளது.
-
ஹரம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்வு
மக்கா: மக்கா ஹரத்தில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 87 பேர் பலியாகியாகியுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். எப்படி இந்த விபத்து நடந்தது என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் படங்களில் பலர் இறந்து கிடக்கும் காட்சிகளும் காயமடைந்து கிடக்கும் காட்சிகளும் காணப்படுகின்றன.
-
மெக்ஸ்வெலின் அபாரப் பிடி! காணொளி
லீட்ஸ்: நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டியின்போது அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளன் மெக்ஸ்வலின் அபார பிடியின் காணொளி.
-
மக்கா விபத்து: 62 யாத்திரிகர்கள் மரணமாகி இருக்கலாம்
AF-90 மக்கா: சற்று முன்னர் மக்கா ஹரம் பள்ளிவாயலில் இடம்பெற்ற கட்டுமான கிரேன் சரிந்து விழுந்ததில் 62 பேர்வரை மரணித்திருக்கலாம் என ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்கள் யாத்திகர்கள் மூலமாகப் பெறப்பட்ட போதிலும், சவுதி அரசாங்கம் பலியானவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. மேலதிக விபரங்கள் விரைவில்AF90
-
இங்கிலாந்து 3 விக்கட்டுக்களால் அபார வெற்றி: தொடர் சமநிலையில்!
– MJ லீட்ஸ்: இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவை 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றது.
-
மக்கா ஹரத்தின் கட்டுமானப் பணியிலீடுபடுத்தப்பட்டிருந்த கிரேன் முறிந்ததில் பலர் உயிரிழப்பு!
-MJ மக்கா: புனித மக்கா ஹரத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று சற்று முன்னர் முறிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தும், காயமடைந்தும் இருப்பதாக மக்கா பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிரிழப்புக்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எந்த நாட்டினர் போன்ற தகவல்களை உடனடியாக அறிவிக்கவில்லை. மேலதிக விபரங்கள் விரைவில்..MJ
-
அதிகம் மீன் சாப்பிட்டால் மனஅழுத்த நோயைத் தடுக்கலாம்
லண்டன்: அதிக அளவு மீன் சாப்பிடுவது மன அழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26 வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்த நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு 17 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது.
-
“ஹிஸ்புல்லாஹ் எப்படி ஆசனம் பெற்றார் என்ற அந்தரங்கம் எங்களுக்குத் தெரியும்: பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை மக்கள் தெரிந்துகொள்வார்கள்”
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் சுபைர் அவர்கள் முன்வைத்த கருத்துகள் முற்றிலும் அறியாமையில் இருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
-
முகமது நபி பற்றிய படம்: ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஈரான் பட இயக்குநருக்கு எதிராக ஃபத்வா
AF-90 மும்பை: முகமத் என்ற பெயரில் முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி மற்றும் அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் ஆகியோகுக்கு ஃபத்வா விதிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த சுன்னி பிரிவு அமைப்பான ரஸாக் அகடமி இந்த ஃபத்வாவை அறிவித்துள்ளது.
-
ஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: ஐஎஸ்
– AF-90 டமஸ்கஸ்: ஐரோப்பாவுக்கு அகதிகளாக தப்பியோடுவது பெரிய பாவம் என சிரிய மக்களை ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
-
“‘ஹி..ஹி’… மஹிந்த தரப்பினரும் அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டமை நகைப்பிற்குரியது” அஸ்வர்
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரும் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமை நகைப்பிற்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் ஊடாக நாடாளுமன்றின் ஜனநாயகம் நிலைநாட்டப்படுகின்றது. ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சிகளினதும் பங்களிப்பும் கருத்துக்களும் பிரதிபலிக்கப்படும்.