மாணவி பாத்திமா நுஆவுக்கு அமைச்சர் ரிஷாத் பாராட்டு

fathima nuaகொழும்பு: அண்மையில் நடை பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரதிசில் பரீட்சையில் சித்தியெய்த முஹம்மத் தஸ்லீம் பாத்திமா நுஹாவினை பாராட்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களினால் இன்று கொழும்பில் இடம் பெற்ற அமைச்சரின் பதவியேற்கும் நிகழ்வில் பிரஸ்தாப மாணவிக்கு நினைவு பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

பிரஸ்தாப மாணவி எருக்கலம்பிட்டியினை சேர்ந்தவரும்,தற்பொது கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியில் கல்வி பயின்று வருபவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

fathima nua

பிரஸ்தாப மாணவியின் தந்தையான முஹம்மத் தஸ்லீம்,பிரபல தொழிலதிபர் முஸ்லிம் ஹாஜியார்,அமைச்சரின் செயலாளர் றியாஸ் பதியுதீன்,மற்றும் வவுனியா பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்க உட்பட பலரும் படத்தில் காணப்படுகின்றனர்.

Published by

Leave a comment