“முஸ்லிம் சமூகத்தின் மூச்சு முஸ்லிம் காங்கிரஸ்” தலைவருக்கான வாழ்துச்செய்தியில் – இல்மி அஹமட் லெவ்வை

ilmi ilmyகாத்தான்குடி: நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றிருக்கின்ற சி.மு.காங்கிரஸின் தேசியத்தலைவர் கௌரவ அமைச்சர் றவூப் ஹக்கீம் எம்.பி அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என ஸ்ரீ.மு.காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய அபிலாசைகளை மு .கா வென்றெடுக்க இவ் அரசியல் அதிகாரத்தை முழுமையாக பயன் படுத்தும் என கிழக்குப் பிராந்தியம் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.

எல்லா இனத்தவர்களுக்கும் மதிப்பளிக்கின்ற கௌரவப்படுத்துகின்ற புதியதோர் அரசியல் கலாச்சாரம் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் உயிர்ப்பெற்றிருக்கின்றது .

இதனால் மூன்று தசாப்தங்களாக ஒருவருக்கொருவர் கறுப்புக்கண்ணாடிகளுக்குள் பார்த்த யுகம் ஒழித்துக்கட்டப்பட்டு கசப்புணர்வுகளை துறந்து எல்லா இனத்தவர்களும் ஒரு குளிர்மைப் பார்வையோடு பார்க்கின்ற நல்லாட்சி துளிர் விடத் தொடங்கி இருக்கிறது.

கடந்த ஆட்சியாளர்களைப் போல் அல்லாது சுதந்திரமாக அமைச்சர்களுக்கு செயல்படக்கூடிய சூழ்நிலையும் கிடைக்கப்பெறவுள்ளது.

மாத்திரமல்லாது கடந்த பொதுத்தேர்தலில் இறைவனது ஏற்பாட்டாலும் தாங்களது வியூகத்தின் அடிப்படையிலும் உங்கள் தலைமத்துவத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவும் மு.கா வுக்கு முழு அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளார்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் நீண்ட காலங்களுக்க பிறகு மாபெரும் ஒற்றுமையை வெளிக்காட்டி இருக்கிறது.

இதனால் குறிப்பாக கிழக்குமாகணத்தில் தீர்கப்படாமல் இருக்கின்ற உன்னிச்சை போன்ற முஸ்லிம்களது பூர்விக காணிப்பிரச்சினைகள் உள்ளடங்களாக எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு விடியலை தாங்கள் பெற்றுத் தரவேண்டும் எனவும் இதற்காக இறைவன் தங்களுக்கு உதவேண்டும் நல் தேகாரோக்கியத்தை தரவேண்டும் எனவும் பிரார்த்திக்கிறோம் என்றும் மேலும் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

Published by

Leave a comment