இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான “SL YOUTH” அமைப்பின் அன்பான வேண்டுகோள்

slyouthsகாத்தான்குடி: இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களிடம் இருந்து உங்களால் பயன்படுத்தப் பட்ட உயர்தர பாடப் புத்தகங்கள், வினாவிடை நூற்கள், கடந்த கால வினாவிடை நூற்கள் போன்றவைகள் சேகரிக்க பட்டு சொந்த செலவில் இவைகளை கொள்வனவு செய்ய முடியாமல் கஷ்டப் படும் வறிய மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் முன்னெடுக்க பட்டுவருகின்றது.

“SL YOUTH MUSLIM ORGANIZATION” கல்விக் குழுவினால் எமது சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக முன்னெடுத்து வரும் பல வேலைத் திட்டங்களின் ஒன்றாக உயர் தரப் பிரிவில் கல்வி கற்கும் மிகவும் வறிய மாணவர்களின் நலன் கருதி அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உயர்தர பாட புத்தகங்கள் , கடந்த கால வினா விடை நூற்கள் போன்றவைகளை பெற்றுக் கொடுக்கும் நல்ல நோக்கத்தின் அடிப்படையில்,

ஒவ்வொரு ஆண்டும் உயர்தர பரீட்சை முடிந்து அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கியுள்ள மாணவர்களிடம் இருந்து உங்களால் பயன்படுத்தப் பட்ட பாடப் புத்தகங்கள், வினா விடை நூற்கள் ,(Past Papers) கடந்த கால வினா விடை நூற்கள் போன்றவைகள் சேகரிக்க பட்டு,

இவைகள் சொந்தமாக பணம் கொடுத்து வாங்க வசதி இல்லாமல் கஷ்டப் படும் ஏழை மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு இவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த கல்வி முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் உங்களிடம் இருந்து சில உதவிகள் கோரப் படுகின்றது.

இந்த சமூக நல திட்டத்துக்கு நீங்களும் பங்களிக்குமாறு மிகவும் அன்புடன் அழைக்கின்றோம், குறிப்பாக மாணவிகள் இந்த சேவைக்கு உங்கள் நூற்களை வழங்க விரும்பினால் கலாச்சார மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள எமது ஊரின் வாசிக சாலையில் “SL YOUTH_ BOOK COLLECTION” – என்ற நாமத்தை குறிப்பிட்டு ஒப்படைக்குமாறும் ,

slyouths

ஆண் மாணவர்கள் எமது கல்வி குழு ஒருங்கமைப்பாளர் MMM.Mazhar அவர்களை (075-7057565 ) என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டும் வழங்க முடியும் என்பதயும் தெரிவித்துக் கொள்வதோடு ,மிக அவசரமாக இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டி இருப்பதால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ் பெருநாளைக்கு முன்னால் இவைகளை ஒப்படைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

சில சூழ்நிலைகளால் இலவசமாக எமது சேவைக்கு உங்கள் நூற்களை வழங்க முடியாதவர்களிடம் இருந்து குறைந்த விலையில் நாம் அவற்றை கொள்வனவு செய்ய தயாராக உள்ளதால் – அவ்வாறானவர்களும், இந்த சேவைக்கு உதவி செய்ய விரும்பும் சமூக ஆதரவாளர்களும் மேலதிக தகவல்களுக்கு -0778821025 தொடர்பு கொள்ளுமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இந்த விடயம் தொடர்பாக பெற்றோர்களும் தனிப்பட்ட கவனம் செலுத்துமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

by:SL YOUTH MUSLIM ORGANIZATION (SYMO- KKY BRANCH)

Published by

Leave a comment