Category: Your Kattankudy
-
ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்க மினா தயார்
மக்கா: ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்க மினா பள்ளத்தாக்கு தயார் நிலையில் இருப்பதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. யாத்திரிகர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (துல் ஹஜ் 8) மினாவில் அமைந்துள்ள கூடாரங்களை நோக்கி வருகை தருகின்றனர். தொடர்ந்து யாத்திரிகர்கள் நாளை அரபா தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
-
மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் காத்தான்குடியில் இஸ்லாமிய மாநாடு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ,அம்பாறை, திருகோணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் ஒரு இஸ்லாமிய மாநாடு ஒன்று எதிர்வரும் மாதம் 02-10-2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.
-
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி அன்வர்பள்ளி கடற்கரைத் திடலில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் செயலாளர் ஏ.என்.எம். மிஹ்ழார் தெரிவித்தார்.
-
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வும் சிசுதிரிய புலமைப்பரிசில் நிகழ்வும்
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது. உதவிப்பிரதேச செயலாளர் ஏ சி அப்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தெரிவுசெய்யப்பட்ட வறியமாணவர்கள் 25 பேருக்கு சிசு திரிய எனும் 500.00 மாதாந்த உதவு தொகைக்கான பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
-
இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!
கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ள விதம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் எம். பிகள் நியமன விவகாரம் ஏற்கனவே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
-
மக்கா தங்குமிட அறையில் தீ: 1500 ஹாஜிகள் வெளியேற்றம் 4 பேர் காயம்
– MJ மக்கா: மக்காவிற்குள் இருக்கும் ஹாஜிகள் தங்குமிட ஹோட்டல் ஒன்றின் 11வது மாடியில் அமைந்துள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, குறித்த ஹோட்டலிலும், சுற்றுப் புறங்களிலுமுள்ள 1500 ஹாஜிகளை அவ்விடத்திலிருந்து மக்கா நகர தீயணைப்புப் படையினர் வெளியேற்றியுள்ளனர்.
-
பிரிட்டிஷ் பிரதமர் பற்றி சொந்தக்கட்சிக்காரர் எழுதிய பரபரப்பு புத்தகம்
லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் மாணவப் பருவத்தில் செய்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய, விநோதமான செயல்கள் குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய அவரது வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டேவிட் கமரன் மாணவ பருவத்தில் செய்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய/அதிர்ச்சியளிக்கத்தக்க செயல்கள் குறித்து அவரது சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஒருவரே இந்த புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
-
ஹஜ்ஜூப் பெருநாள்: வியாழன், வெள்ளி பாடசாலை விடுமுறை!
கொழும்பு: ஹஜ்ஜுப் பெருநாள் தினமான எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு அடுத்த நாளான செப்டெம்பர் 25 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த பாடசாலை நாளுக்கு பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதி, சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பௌத்த பிக்கு கைது!
வவுனியா: வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பௌத்த பிக்கு ஒருவர் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் உள்ள ரங்காத்கம ரஜகம விகாரைக்கு சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனை அவ் விகாரை மதகுரு துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தாக குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
-
பல்கலைக்கழக மாணவர்களின் கொலை: மஹிந்த குடும்பம் எதிர்நோக்கும் மற்றுமொரு சிக்கல்..?
கொழும்பு: கம்பஹா பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பான விசாரணை சீ.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களாக இருந்த ஜானக மற்றும் சிசித எனும் இரண்டு மாணவர்கள் கடந்த 2012ம் ஆண்டு கம்பஹா, யக்கலையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.