வவுனியா: வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பௌத்த பிக்கு ஒருவர் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் உள்ள ரங்காத்கம ரஜகம விகாரைக்கு சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனை அவ் விகாரை மதகுரு துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தாக குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, குறித்த விகாரையின் விகாராதிபதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, பாதிப்படைந்த சிறுவன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published by


Leave a comment