காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

dharul athar beach prayer 2014காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.

இங்கு பெருநாள் தொழுகையை நடைபெறவுள்ளதோடு பெருநாள் குத்பாப் பிரசங்கத்தை பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் நிகழ்த்தவுள்ளார்.

dharul athar (3) beach
ஆவனப் படம்

இதில் அனைத்து சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா வேண்டுகோள் விடுக்கின்றது.

Published by

Leave a comment