Category: Your Kattankudy
-
ஹஜ் நெரிசலில் குறைந்தது 470 பேர் பலி! 400பேர் காயம்
மக்கா: மினாவில் சனநெரிசலில் சிக்கி சுமார் 470க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
ஹஜ் பெருநாளை பிரதி அமைச்சர் ஹரீஸ் மக்களுடன் கொண்டாடினார்
ஹாசிப் யாஸீன் கல்முனை: ஹஜ் பெருநாளை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது சொந்த ஊரான கல்முனையில் மக்களுடன் கொண்டாடினார். இன்றைய ஹஜ் பெருநாள் தொழுகைக்காக கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு சென்ற பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொழுகையை அங்கு நிறைவேற்றியதுடன் பெருநாள் குத்பா பிரசங்கத்திலும் கலந்து கொண்டார்.
-
பிறை-1, திடல்கள்-4: காத்தான்குடியில் அதிசயம்!
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: இன்று ஹஜ்ஜூப் பெருநாள் உலகின் அநேகமான நாடுகளில் ஒரே தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. “சர்வதேசப் பிறை” மார்க்க இயக்கங்களும், “உள்ளுர் பிறை” மார்க்க இயக்கங்களும் ஒருமித்தே பெருநாள் கொண்டாடும் ஓர் சந்தர்ப்பம் குறிப்பாக காத்தான்குடியில் பல வருடங்களுக்குப் பின்னர் இம்முறை ஏற்பட்டிருக்கிறது.
-
பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இஸ்லாமிய வரலாற்றில் இப்றாஹீம் நபியின் தியாகத்தை படிப்பினையாகத் தந்த திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
பிரதியமைச்சர் அமீர் அலியின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்குமான தமது அரசியல் பணியில் அனைத்து இன மக்களினது உரிமைகளையும் சலுகைகளையும் நிறைவேற்றி கொடுப்பதில் தாம் முன்னின்று செயற்படவுள்ளதாக பிரதியமைச்சா் அமீா் அலி தெரிவித்துள்ளார். மேலும் இப்புனித ஹஜ் பெருநாள் இத் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதற்கு கிடைத்த பெருபேறு சந்தர்ரப்பமாகும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ்.அமீா் அலி தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
காத்தான்குடி சமூக மதிப்பீட்டிற்கான அமைப்பின் தலைவர் இல்மி அகமட் லெவ்வையின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
பல்வேறு துன்ப துயரங்களோடு வாழுகின்ற விசேட தேவையுடையோர் இளம் விதவைகள் மற்றும் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கும் புனித ஹஜ்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என காத்தான்குடி சமூகமதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
-
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் உயர்ச்சி பெற நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக என ஐக்கிய மக்கள் சுதந்திர் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் படியும் எமக்கு போதித்துவருவவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்றைய தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
தியாகத்தையும் பொறுமையையும் பரைசாற்றும் இத்தியாகத் திருநாளில் நமக்காக, நம்சமூகத்திற்காக, நம்நாட்டிற்காக தியாக உணர்வுடன் செயற்பட்டு சமூகத்தின் சுபீட்சத்திற்காகவும் நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒன்றுபட்டு உழைப்பதற்கு திடசங்கர்ப்பம் பூண வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
காத்தான்குடியில் மக்கள் பாவனைக்கு உதவாத 38 இலகு ரக மற்றும் கணரக வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் செல்லும் மக்கள் பாவனைக்கு உதவாத பழைய ,புதிய வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை பரிசோதிக்கும் விஷேட நிகழ்வு 22-09-2015 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
-
ஹஜ்ஜூப் பெருநாள் விசேட கலை கலாசார நிகழ்ச்சி – 2015 (ஹிஜ்ரி 1436)
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தினால் ஹஜ்ஜூப் பெருநாள் விசேட கலை கலாசார நிகழ்ச்சி – 2015 (ஹிஜ்ரி 1436) எதிர்வரும் 25.09.2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 07.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ் பெண்ணிடம் கட்டணமாக தோடு பெற்ற அஷ்ரப்!
கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் ஏ. எச். எம். அஷ்ரப் இன்றைய நாட்களில் பெரிதும் நினைவு கூரப்படுகின்றார். இவரின் சட்டத்தரணி உயர் தொழிலில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மிகவும் சுவாரஷியம் ஆனது. தமிழ் பெண் கட்சிக்காரர் ஒருவருக்காக விவாகரத்து வழக்கில் அஷ்ரப் ஆஜராகிக் கொண்டிருந்தார். வழக்குத் தவணைகளின்போது இப்பெண் கட்டணம் கொடுப்பார்.