மக்கா தங்குமிட அறையில் தீ: 1500 ஹாஜிகள் வெளியேற்றம் 4 பேர் காயம்

haram makkah– MJ

மக்கா: மக்காவிற்குள் இருக்கும் ஹாஜிகள் தங்குமிட ஹோட்டல் ஒன்றின் 11வது மாடியில் அமைந்துள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, குறித்த ஹோட்டலிலும், சுற்றுப் புறங்களிலுமுள்ள 1500 ஹாஜிகளை அவ்விடத்திலிருந்து மக்கா நகர தீயணைப்புப் படையினர் வெளியேற்றியுள்ளனர்.

இச்சம்பவம் உள்ளுர் நேரப்படி இன்று திங்கட்கிழமை பகல் 2:45 மணிக்கு இடம்பெற்றதாக அந்நாட்டின் ஊடகப் பேச்சாளர் அப்துல்லாஹ் அல் ஹர்தி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யெமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அல் ஹர்தி தெரிவிக்கிறார்.

அறையொன்றில் மின்சார ஒழுக்கின் காரணமாகவே இத்தீவிபத்து இடம்பெற்றிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை மக்கா நகரில் ஆசிய நாட்டவர் தங்கியிருந்த பகுதியில் ஏற்பட்ட மற்றுமொரு தீ விபத்தில் 1000 பேர் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தில் 2 இந்தோனேசிய ஹாஜிகள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.MJ

Published by

Leave a comment